கமலுக்கு ‘அதிர்ச்சி’ கொடுத்த முக்கிய நிர்வாகி.. காலியாகும் ம.நீ.ம கூடாரம்.. அதிருப்தியில் கமல் !!

Published : Feb 28, 2022, 09:46 AM ISTUpdated : Feb 28, 2022, 11:26 AM IST
கமலுக்கு ‘அதிர்ச்சி’ கொடுத்த முக்கிய நிர்வாகி.. காலியாகும் ம.நீ.ம கூடாரம்.. அதிருப்தியில் கமல் !!

சுருக்கம்

தேர்தலில் தொடர் தோல்வியை தொடர்ந்து, மக்கள் நீதி மய்யத்தில் இருந்து, பலர் விலக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், அதாவது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் திமுகவை தவிர அதிமுக, பாஜக, பாமக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், தேமுதிக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிட்டன.

இதில் பேரூராட்சிகளில் பாஜக 150 க்கும் மேற்பட்ட வார்டுகளில் வென்றுள்ளது. அது போல் பாமகவும் கணிசமான இடங்களில் வென்றுள்ளது. கடந்த தேர்தல்களை காட்டிலும் இந்த முறை கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக கடும் பிரச்சாரம் செய்தார். நிறைய செய்தியாளர்களை சந்தித்தார். மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் வெற்றி பெற்று ஓராண்டுக்குள் அவர்கள்  கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா செய்வது என வீடு வீடாக பத்திரத்தில் கையெழுத்திட்டு கொடுத்திருந்தனர்.

இத்தனை செய்த பிறகு மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. இக்கட்சி சுமார் 1300 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.  இந்நிலையில், கட்சி நிர்வாகிகளிடம், 'ஆன்லைன்' வாயிலாக நேற்று கமல் பேசினார். இதில், கட்சியில் செய்ய வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை, தோல்விக்கான காரணங்கள், கட்சி விரோதமாக வேலை பார்த்தோர் குறித்து பேசியுள்ளார்.

இதற்கிடையே, தனிப்பட்ட காரணங்களை சுட்டிக்காட்டி, கட்சியில் இருந்து விலகுவதாக, பலர் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. அதையடுத்து, ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற ஏழு நாள் அவகாசம், கட்சி தலைமையால் வழங்கப்பட்டுள்ளது.'ராஜினாமா கடிதத்தை திரும்ப பெறாமல் போனாலோ, எவ்வித அறிவிப்பும் வெளியாகாமல் போனாலோ, ராஜினாமா கடிதம் ஏற்றதாக கருதப்படும்' என, கட்சி தரப்பில் கூறப் பட்டுள்ளது. 

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து, மாநில செயலரும், தொழிற்சங்க பேரவை தலைவருமான பொன்னுசாமி விலகியுள்ளார்.சட்டசபை தேர்தலில், கமலின் மக்கள் நீதி மய்யம் சார்பில், பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டவர் பொன்னுசாமி. தொழிற்சங்க பேரவை தலைவராகவும், கட்சியின் மாநில செயலராகவும் செயல்பட்டார்.

இவர் நேற்று கட்சியில் இருந்து விலகுவதாக தலைமைக்கு கடிதம் கொடுத்தார். அவரது கடிதத்தை ஏற்று, அவரை கட்சி தலைமை விடுவித்துள்ளது.இதன் பின்னணியில், தொழிற்சங்கத்தில் நடந்த பல்வேறு முறைகேடுகளே காரணம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே முக்கிய நிர்வாகிகள் பலர், விலகியுள்ள நிலையில் தொடர் ராஜினாமா கடிதங்களால் மக்கள் நீதி மய்ய தலைமை கவலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

வெண்டிலேட்டடிரிலும் வீராப்பு காட்டும் காங்கிரஸ்..! போக்கிடமின்றி துர்பாக்கியத்தில் மாநிலக் கட்சிகள்..! சுக்குநூறாக உடையும் இண்டியா கூட்டணி..!
தமிழக ஆளுநரை அவமதித்த மாணவிக்கு நீதிமன்றம் கொடுத்த ஷாக்..! பட்டம் ரத்து செய்யப்படுகிறதா?