அமெரிக்க பிரபலங்கள் ட்விட்டர் கணக்கை முடக்கிய ஹேக்கர்ஸ்..! பதறிய அமெரிக்க போலீஸ்.. !!

By T BalamurukanFirst Published Jul 16, 2020, 7:39 AM IST
Highlights

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பணிகளை அங்கு போட்டியிடும் கட்சிகள் தங்களது வெற்றிக்காக ஸ்பீடாக வேலை செய்து வரும் வேலையில் திடீரென ஹேக்கர்ஸ் டீம் அங்குள்ள பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளை மோசடி செய்திருப்பதால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா, வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடன், உலக பணக்காரர்களில் ஒருவரான் பில்கேட்ஸ் உள்ளிட்ட உலகத் தலைவர்களின் டுவிட்டர் கணக்குகளை மோசடி கும்பல் திடீரென ஹேக் செய்தது. அதேபோல் ஆப்பிள் போன்ற முன்னணி நிறுவனங்களில் கணக்குகளையும் ஹேக் செய்துள்ளனர்.

அவர்களுடைய பக்கத்தில் "நாங்கள் உங்களுக்கு பிட்காய்ன் மூலம் இரண்டு பணம் வழங்குகிறோம். நீங்கள் ஆயிரம் டாலர் அனுப்பினால், 2 ஆயிரம் டாலர் திரும்ப வழங்குவோம். 30 நிமிடத்திற்குள் திரும்ப வழங்கப்படும் என்று" பதிவிட்டு ஒரு பிட்காய்ன் லிங்கையும் அனுப்பியுள்ளனர். பிட்காயின் நிறுவனத்தின் லிங்கை அனுப்ப வேண்டிய அவசியம் என்னவென்று தற்போது அமெரிக்காவில் உள்ள உளவுத்துறை போலீசார் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
 
click me!