சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் எச். ராஜா!!

By sathish kFirst Published Mar 3, 2019, 10:45 AM IST
Highlights

தலைமை எந்த முடிவு எடுத்தாலும்நான் கட்டுப்படுவேன், கட்சி வாய்ப்பளித்தால் சிவகங்கை தொகுதியில் போட்டியிடுவேன் என்று பிஜேபி தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

பிஜேபியின் ஐந்து ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை விளக்கியும், மீண்டும் பிரதமராக வரவேண்டும் எனக் கோரியும் இருசக்கர வாகன பேரணியை ஹெச். ராஜா தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்த அவர்; பாரதிய ஜனதா கட்சியுடன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பாரிவேந்தர் பச்சைமுத்துவுக்கு பெரிய அளவில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், ஒரு தொகுதியில் கூட அவருடைய கட்சி டெபாசிட் கூட வாங்கவில்லை. அதனால், அவர் திமுக கூட்டணிக்கு செல்வதால் எங்களுக்கு எந்தவித நஷ்டமும் இல்லை. 

மேலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி 19.5 சதவீத வாக்குகள் பெற்றன. அப்போது, திமுக கூட்டணி எங்களைவிட வெறும் 2 சதவீத வாக்குகள் தான் அதிகம் பெற்றது. தற்போது அதிமுக கூட்டணியில் பிஜேபி சேர்ந்துள்ளதால், மிகவும் வலிமையான கூட்டணியாக அமைந்துள்ளது. 

புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் பிஜேபி - அதிமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் பிரமாண்ட வெற்றி பெறும். மேலும், பாகிஸ்தானுக்கு சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, அந்த நாடு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. ஆளும் பிஜேபி அரசு சரியான பதிலடி கொடுத்ததன் எதிரொலியாக இந்திய விமானி அபிநந்தன் விடுவிக்கப்பட்டுள்ளார் என்றார். 

மேலும், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் நீங்கள் போட்டியிடுவீர்களா என்று எழுப்பிய கேள்விக்கு; தேர்தலில் வேட்பாளராக அறிவிப்பதும், கட்சி பதவிகள் அறிவிப்பதிலும் தலைமை எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு நான் கட்டுப்படுவேன் என்றும் பதிலளித்தார்.

click me!