நீங்க வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கீங்களா ? அப்ளிகேஷன் போடுங்க …உங்க வீடு தேடி 2000 ரூபாய் வரும்… ராஜேந்திர பாலாஜி அதிரடி….

Published : Mar 03, 2019, 10:30 AM IST
நீங்க வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கீங்களா ? அப்ளிகேஷன் போடுங்க …உங்க வீடு தேடி 2000 ரூபாய் வரும்… ராஜேந்திர பாலாஜி அதிரடி….

சுருக்கம்

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள அனைவரும் விண்ணப்பம் செய்யுங்கள், உங்களுக்கு தமிழக அரசின் 2000 ரூபாய் கிடைக்கும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.  

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி வெம்பக்கோட்டை அருகே ஆலங்குளத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி சார்பில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஜெயலலிதா விட்டு சென்ற திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ்  ஆகியோர் செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் பெயர் மக்கள் மனதில் எப்படி நிலை நின்றதோ அதேபோன்று தற்போது இபிஎஸ் பெயர் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது. ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்தவர் தினகரன். அவர் தற்போது தி.மு.க.வோடு மறைமுகமாக கூட்டணி வைத்துக்கொண்டு ஆட்சியை கலைக்க திட்டம் போடுகிறார். அவருடைய கனவு ஒரு போதும் பலிக்காது. டி.டி.வி. தினகரனை நம்பி இனியும் யாரும் செல்ல வேண்டாம் என்றும் அவர் கூறினார்.

குக்கர்  சின்னம் மக்கர் பண்ணியதால டிடிவி தினகரன் ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை நம்பி யாரும் போக வேண்டாம் எனவும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

தமிழக அரசு தற்போது பொது மக்களுக்கு 2000 ரூபாய் வழங்கி வருகிறது. இதனால் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள அனைவரும் விண்ணப்பம் செய்யுங்கள், உங்களுக்கு தமிழக அரசின் 2000 ரூபாய் கிடைக்கும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ராமதாஸ் IN திருமா OUT..? திக்கு தெரியாமல் தவிக்கும் திமுக..? விசிக கோபத்துக்கு காரணம் என்ன..?
அனல் பறக்கும் தேர்தல் களம்..! பிப்.1 முதல் 234 தொகுதிகளிலும் பிரசாரத்தை தொடங்கும் திமுக..