இது சும்மா “டிரெயிலர்” தான்.. மெயின் பிக்சர இனிமே தான் பார்க்க போறீங்க..! காங்கிரஸை கதறடிக்கும் எச்.ராஜா..!

 
Published : Dec 02, 2017, 04:44 PM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
இது சும்மா “டிரெயிலர்” தான்.. மெயின் பிக்சர இனிமே தான் பார்க்க போறீங்க..! காங்கிரஸை கதறடிக்கும் எச்.ராஜா..!

சுருக்கம்

h raja tweet about uttar pradesh victory

உத்தர பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் அடைந்துள்ள படுதோல்வி, குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான டிரெயிலர் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

மத்திய பாஜக அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஆகிய திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெரிவித்துவருகின்றன. 

ஆனால், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் எந்த தேர்தலிலும் எதிரொலிக்கவில்லை. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

இந்நிலையில், கடந்த மாதம் 22, 24, 29 ஆகிய தேதிகளில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. உத்தர பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது.

மொத்தமுள்ள 16 மாநகராட்சிகளில் 14 மாநகராட்சிகளை பாஜக கைப்பற்றியது. எஞ்சிய இரண்டில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கைப்பற்றியது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.

குஜராத் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், உத்தர பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றி பெற்றது, பாஜகவினரின் உத்வேகத்தை அதிகப்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் தொடர் தோல்விகளிலிருந்து மீள துடித்த காங்கிரஸ் கட்சிக்கு, இந்த தோல்வி மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் சொந்த மக்களவைத் தொகுதியான அமேதி மாநகராட்சியிலும் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது பெரும் பின்னடைவை காங்கிரஸுக்கு ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, உத்தர பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸின் படுதோல்வி என்பது குஜராத்தின் முடிவிற்கு டிரெய்லர் தான் என டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="ta" dir="ltr">அமேதியில் காங்கிரஸ் படுதோல்வி. இது குஜராத்தின் முடிவிற்கு ட்ரெய்லர்</p>&mdash; H Raja (@HRajaBJP) <a href="https://twitter.com/HRajaBJP/status/936591356729761793?ref_src=twsrc%5Etfw">December 1, 2017</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

குஜராத் சட்டமன்றத் தேர்தலிலும் அமோக வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைக்கும் என்ற விதமாக இந்த டுவீட்டை எச்.ராஜா பதிவிட்டுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!