எதிர்க்கட்சி தலைவருக்கு சட்டம் தெரியணும்..! ஸ்டாலினை கிண்டல் செய்யும் எச்.ராஜா

Asianet News Tamil  
Published : Jun 23, 2018, 02:53 PM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
எதிர்க்கட்சி தலைவருக்கு சட்டம் தெரியணும்..! ஸ்டாலினை கிண்டல் செய்யும் எச்.ராஜா

சுருக்கம்

h raja teased opposition leader stalin

எதிர்க்கட்சி தலைவருக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும் என ஸ்டாலினை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார். 

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழகம் முழுவதும் சென்று ஆய்வுகளையும் அதிகாரிகளுடன் ஆலோசனைகளையும் மேற்கொண்டு வருகிறார். ஆளுநரின் ஆய்வு அதிகார அத்துமீறல் எனக்கூறி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

எனினும் ஆளுநரின் ஆய்வு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நாமக்கல்லில் ஆளுநரின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டிய திமுகவினர் 300 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு உடனடியாக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். 

திமுகவினர் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர். 

இதற்கிடையே ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டிய திமுகவினரை கைது செய்தது சரியான நடவடிக்கைதான். அதற்கு எதிராக ஸ்டாலின் போராட்டம் நடத்துவது சரியல்ல என்பதை உணர்த்தும் வகையில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா டுவீட் செய்துள்ளார். 

அந்த டுவீட்டில், ஒரு எதிர்கட்சி தலைவருக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும். இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 124 தெளிவாக கூறுகிறது ஜனாதிபதி/ஆளுனரின் மரியாதைக்கு குந்தகம் ஏற்படுத்த நினைத்தால் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை உண்டு. நாமக்கல் காவல்துறை செயல் சட்டப்படி சரி என எச்.ராஜா பதிவிட்டுள்ளார். 

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="ta" dir="ltr">ஒரு எதிர்கட்சி தலைவருக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும். இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 124 தெளிவாக கூறுகிறது ஜனாதிபதி/ஆளுனரின் மரியாதைக்கு குந்தகம் ஏற்படுத்த நினைத்தால் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை உண்டு. நாமக்கல் காவல்துறை செயல் சட்டப்படி சரி.</p>&mdash; H Raja (@HRajaBJP) <a href="https://twitter.com/HRajaBJP/status/1010392830341070848?ref_src=twsrc%5Etfw">June 23, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

ஸ்டாலினுக்கு சட்டம் தெரியவில்லை என கிண்டல் செய்யும் விதமாகவே இந்த டூவிட் உள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

அமித் ஷா கையில் சிக்கிய குடுமி.. முதல்வர் கெத்துக் காட்டிய புதுகட்சிக்கு 2 சீட்டு..! முதல் தேர்தலே பனால்..!
23ம் தேதி பிரதமருடன் மேடையேறும் டிடிவி தினகரன்..? மா.செ.களுடன் இன்று முக்கிய ஆலோசனை