
பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள்; தற்போது, பரப்பன அக்ரஹார சிறை வரை பாய்ந்துள்ளது என்று பாஜகவின்தேசிய செயலாளர் ஹெச். ராஜா கூறியுள்ளார்.
பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவுக்கு சிறப்பு சலுகை செய்து கொடுக்கப்பட்டதாக டிஐஜி ரூபா, டிஜிபி சத்தியநாராயணா மீது புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
லஞ்சம் பெற்றதாக கூறப்படும் புகாரை சிறைத்துறை அதிகாரி டிஜிபி சத்தியநாராயணா மறுத்துள்ளார். அதே சமயம், டிஐஜி ரூபா,
சிறையில் வசதி செய்யப்பட்டுள்ளது குறித்தும் லஞ்சம் வழங்கப்பட்டுள்ளது குறித்தும் தன்னிடம் ஆதாரம் உள்ளதாக கூறி வருகிறார். தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைக்குத் தயார் என்றும் டிஐஜி ரூபா கூறி வருகிறார்.
டிஐஜி ரூபாவின் புகார் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழும்பி வருகிறது. இந்த நிலையில், பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா, பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள்; தற்போது, பரப்பன அக்ரஹார சிறை வரை பாய்ந்துள்ளது என்று கூறியுள்ளார்.
கோவையில், ஹெச். ராஜா, செய்தியாளர்களைச் சந்தித்தார். பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் செய்து கொடுப்பதற்காக லஞ்சம் வழங்கப்பட்டதாக கூறப்படும் புகார் குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ஹெச். ராஜா, பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள்; தற்போது பரப்பன அக்ரஹார சிறை வரை பாய்ந்துள்ளதாக கூறினார்.
குடும்ப ஆட்சி மற்றும் பண ஆட்சியில் இருந்து தமிழகத்தை காக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
ஊழலின் மூலமாக பெற்ற பணத்தை சிறைச்சாலையிலும், சொகுசு வாழ்க்கை வாழ பயன்படுத்துகின்றனர் என்று கூறினார். தமிழகத்தில் இருந்து அதிமுக, திமுகவை மக்கள் அப்புறப்படுத்த வேண்டும் என்றார்.
குடும்ப ஆட்சி மற்றும் பண ஆட்சியில் இருந்து தமிழகத்தை காக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஹெச். ராஜா, வக்கிரமான நிகழ்ச்சிகளை நடத்தும் கமல், ஏன் மற்றவர்களை விமர்சிக்கிறார் என்று கேள்வி எழுப்பினார்.