
சாரண - சாரணியர் தேர்தல் நடைபெறும் மாநில தலைமையகத்தில் ஹெச். ராஜா ஆதரவாளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சாரண - சாரணியர் இயக்கத்துக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. தலைவர் பதவிக்கு பள்ளி கல்வி முன்னாள் இயக்குநர் மணி என்பவரும், பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜாவும் போட்டியிடுகின்றனர்.
இதற்கான தேர்தல் இன்று காலை சென்னையில் உள்ள சாரண, சாரணிய இயக்க அலுவலகத்தில் துவங்கியது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் சாரண - சாரணியர் இயக்க தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சென்னை, காமராஜர் சாலையில், சாரண - சாரணியர் தேர்தல் நடைபெறும் மாநில தலைமையகத்தில் ஹெச். ராஜா ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சாரண - சாரணியர் தேர்தலை ரத்து செய்து கடிதம் வந்துள்ளதாக ஹெச். ராஜா ஆதரவாளர்கள் கூறினர்.
இதற்கு, தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து எந்த அறிவிப்பும் வராததால் தேர்தலை தொடர்ந்து நடத்துவதாக கூறினார். இதனால் தேர்தல் அதிகாரி மற்றும் ஹெச். ராஜா ஆதரவாளர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.