கு.க. செல்வம் மீது நடவடிக்கை எடுப்பதா..? திமுக இந்து விரோத கட்சி.. திமுகவை வசைபாடும் ஹெச்.ராஜா!!

Published : Aug 07, 2020, 09:09 PM IST
கு.க. செல்வம் மீது நடவடிக்கை எடுப்பதா..? திமுக இந்து விரோத கட்சி.. திமுகவை வசைபாடும் ஹெச்.ராஜா!!

சுருக்கம்

தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலித்த கு.க.செல்வம் மீது நடவடிக்கை எடுத்து திமுக இந்து விரோத கட்சியே என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ. கு.க. செல்வம் டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்தார். தொகுதி மேம்பாட்டுக்காக சந்தித்ததாக கு.க. செல்வம் அறிவித்த அதே வேளையில் பாஜகவில் சேர டெல்லி வரவில்லை என்றும் கு.க. செல்வம் தெரிவித்தார். ஆனால், அடுத்த நாளே கு.க. செல்வத்தை இடை நீக்கம் செய்த மு.க. ஸ்டாலின், அவர் வகித்த தலைமை நிலைய செயலாளர், பொதுக்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கினார். மேலும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலக்கவும் கு.க. செல்வத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் திமுக தலைமை அறிவித்தது.
இதனையத்து அன்றைய தினமே கு.க. செல்வம் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாயலத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிலையில் கு.க. செல்வம் மீது திமுக நடவடிக்கை எடுத்ததற்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்து மதத்தை இழிவாகப் பேசிய ஆ.ராசா மீதோ அல்லது அக்கினி தெய்வம் திரௌபதியை இழிவாகப் பேசிய பழ.கருப்பையா மீதோ நடவடிக்கை எடுக்காமல், தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலித்த கு.க.செல்வம் மீது நடவடிக்கை எடுத்து திமுக இந்து விரோத கட்சியே” என்று ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

 

PREV
click me!

Recommended Stories

ஓட்டுக்காக மாணவர்களுக்கு லேப்டாப்..! முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் நாடகம்..! அடித்து ஆடும் இபிஎஸ்!
லாட்டரி மார்ட்டின் மகளை ஏமாற்றி திருமணம் செய்தவர் ஆதவ் ஆர்ஜூனா..! விஜய் EX மேலாளர் பகீர் குற்றச்சாட்டு..!