இந்தியாவில் 225 ரூபாய்க்கு கொரோனா தடுப்பூசி ...! சீரம் நிறுவனம் திட்டம்!!

By T BalamurukanFirst Published Aug 7, 2020, 9:02 PM IST
Highlights

உலக அளவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிறுவனங்களுடன் இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி இந்தியா போன்ற வருமானம் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் 2021ம் ஆண்டு தொடக்கத்தில் 225 ரூபாய்க்கு  தடுப்பூசியை விநியோகிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக நிதி திரட்டும் பணி நடைபெற்று வருகிறது.
 
உலக அளவில் முன்னணியில் உள்ள ஆக்ஸ்போர்டு, அஸ்ட்ராஜெனெகா மற்றும் நோவாவாக்ஸ் பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசிகளை விரைவாக உற்பத்தி செய்ய சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவிற்கு உதவுவதற்காக 150 மில்லியன் டாலர் நிதியை வழங்க பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. இந்த புதிய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்தியா மற்றும் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கு 10 கோடி பேருக்கு ஒரு டோஸ் 225 ரூபாய் விலையில் 100 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்தியா போன்ற வருமானம் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கு தடுப்பூசிகளை வாங்குவதற்கு நன்கொடை நாடுகளிடமிருந்து நிதி திரட்டுவதன் மூலம் இது செய்யப்படுகிறது. புதிய ஒத்துழைப்பின் கீழ், அஸ்ட்ராஜெனெகாவின் கொரோனா தடுப்பூசி மனித பரிசோதனை வெற்றிகரமாக இருந்தால், 57 தகுதி வாய்ந்த நாடுகளுக்கு கிடைக்கும். நோவாவாக்ஸின் தடுப்பூசி பரிசோதனை வெற்றிகரமாக இருந்தால், 92 நாடுகளுக்கும் கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை தயாரிப்பதற்கான அதன் திறனை வளர்ப்பதில் முதலீடு செய்ய சுமார் 100 மில்லியன் டாலர் நிதி திரட்டப்பட்டு உள்ளது. இது இந்தியாவில் ‘கோவிஷீல்ட்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த தடுப்பூசி பல்வேறு நாடுகளில் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் மீது சோதனை செய்யப்பட்டு வருகிறது.

click me!