முதலைக் கண்ணீர் வடிக்கும் சரக்கு மிடுக்கு தலைவர்... திருமா மீது ஹெச்.ராஜா பாய்ச்சல்..!

Published : Jan 06, 2020, 05:47 PM IST
முதலைக் கண்ணீர் வடிக்கும் சரக்கு மிடுக்கு தலைவர்... திருமா மீது ஹெச்.ராஜா பாய்ச்சல்..!

சுருக்கம்

இடதுசாரிகள் ஜே.என்.யூ வில் நடத்திய முகமூடி நாடகத்தை நம்பி தமிழக மாணவர்கள் யாரும் தங்கள் வாழ்க்கையை வீணடித்துக் கொள்ள வேண்டாம் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.   

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ’’சரக்கு மிடுக்கு பேச்சுக்கு சொந்தக்காரர், டில்லியில் இருந்து கொண்டு தென் மாவட்டங்களை தீ பிடிக்க வைப்பேன் என்று பேசிய வன்முறையாளர், இன்று ஜே.என்.யூ., வில் இடது சாரிகளின் முகமூடி வன்முறைக்கு முதலைக் கண்ணீர்.

முகிலனை காவல்துறை கடத்தியது என்று தேசவிரோத கும்பல் போட்ட நாடகம் போன்றதே இப் புலம்பலும். பாரதத்தை துண்டாடுவோம் என்று கொக்கரித்தவரகள் போடும் நாடகம். செமஸ்டர் தேர்வுக்கு கட்டணம் கட்ட வந்த மாணவர்களை முகமூடி அணிந்த இடதுசாரிகள் தாக்கிவிட்டு ஒப்பாரி வேறா?

இடதுசாரிகள் ஜே.என்.யூ வில் நடத்திய முகமூடி நாடகத்தை நம்பி தமிழக மாணவர்கள் யாரும் தங்கள் வாழ்க்கையை வீணடித்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். 1964-67 காலகட்டத்தில் திக& திமுக இந்தி எதிர்ப்பு நாடகத்தை மாணவனாக பார்த்தவன் நான். இன்று அவர்கள் சி.பி.எஸ்.இ.பள்ளி முதலாளிகள்’’ எனத் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி