கமல்ஹாசனின் வெறி ரசிகர் ஹெச்.ராஜா!?

Published : May 20, 2019, 04:15 PM IST
கமல்ஹாசனின் வெறி ரசிகர் ஹெச்.ராஜா!?

சுருக்கம்

*    தனது பேச்சுக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவரது தயாரிப்பில் வெளியாகும் ‘கடாரம் கொண்டான்’ படம் ஓடாது, எதிர்த்து போராடுவோம்: இந்து முன்னணி சுப்பிரமணியம்.   

*    தனது பேச்சுக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவரது தயாரிப்பில் வெளியாகும் ‘கடாரம் கொண்டான்’ படம் ஓடாது, எதிர்த்து போராடுவோம்: இந்து முன்னணி சுப்பிரமணியம். 
(இதத்தானே அவரும் எதிர்பார்த்தாரு. ‘அதிர்ஷ்டமில்லா விக்ரமை வெச்சு படம் எடுத்துடோமே! எப்படி காசை பார்க்கப்போறோம்?’ன்னு கமல் பயந்துனே இருந்தாரு. இந்தா வந்துட்டாங்கல்ல அந்தப் படத்துக்கு ஃப்ரீ விளம்பரம் கொடுத்து, ஓட வைக்கிற பயலுவ)

*    அ.தி.மு.க. ஆட்சி  முடிவுக்கு வரும்போது, ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார். எனவே ரசிகர்கள் கவலை கொள்ள வேண்டாம்: தமிழருவி மணியன். 
(அட மணியண்ணே, நீ இன்னுமே போயஸ் கார்டனுக்கு பக்கத்துலதான் குந்திகினு இருக்கியா! உன்னை உசுப்பி விட்டுட்டு அந்தாளு ரெண்டு படத்தை முடிச்சுட்டாரு, பொண்ணுக்கு ரெண்டாவது கல்யாணத்தையும் முடிச்சுட்டாரேய்யா!)

*    தேர்தல் முடிவுக்குப் பின் மத்தியில் மட்டுமில்லை, தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் நிச்சயம். ஆனால் இப்போது ஆட்சி கையிலிருக்கும் நம்பிக்கையில் தேனி எம்.பி. ரவீந்திரநாத் குமார்! என்று கல்வெட்டில் பொறுத்துள்ளனர்: நல்ல கண்ணு. 
(அப்படியே தேனியில தோத்தாலும், பி.ஜே.பி.ட்ட பன்னீர் காட்டுற பணிவுல வாரணாசி, அலகாபாத்துன்னு எங்கேயாச்சும் ஒரு ராஜ்யசபா எம்.பி. பதவி அவர் மகனுக்கு கிடைக்கமாலா போயிடும்?

*    கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வார். அமைய இருக்கும் காங்கிரஸ் ஆட்சியில், மத்திய அமைச்சரவையில் அவருக்கு ஒரு முக்கிய பொறுப்பு காத்துக் கொண்டிருக்கிறது: கே.என்.நேரு
(அந்தம்மா நாட்டோட உள்துறை அமைச்சரே ஆனாலும், உங்க தம்பி ராமஜெயம் கொலை வழக்கு முடிவுக்கு வரப்போறதில்லை. பின்னே ஏண்ணே இந்த சீனெல்லாம்? தண்ணியக்குடி தண்ணியக்குடி!)


*    கமல்ஹாசனின் சகோதரி மகன் பாஸ்டருக்கு படித்துக்  கொண்டிருக்கிறார், இது போக கமலின் குடும்பமே கிறிஸ்துவ மதத்துக்கு மாறிவிட்டது. அவரது கட்சிக்கு பின்னால் தேவாலயங்கள் உள்ளன: ஹெச்.ராஜா. 
(அண்ணே நீங்க கமலோட இப்படி வெறித்தனமான ரசிகனா இருப்பீங்கன்னு நினைக்கலை. அவரோட குடும்பத்து ஆளுங்களோட பொழைப்பை கூட தெரிஞ்சு வெச்சிருக்கீங்களே, நீங்கதான் நம்மவரின் தெறி ரசிகன்.)

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி