எங்கள் வயிற்றில் அடிக்கிறார் வைகை செல்வன்... அ.தி.மு.க பேச்சாளர்களின் பேஜார்..!

By Asianet TamilFirst Published May 20, 2019, 3:51 PM IST
Highlights

ஐந்தாம் கிளாஸை கூட தாண்டாமல், அரசியலுக்குள் நுழையும் கடாமுடா பேர்வழிகள் கூட தானும் சம்பாதித்து, சக மனுஷனும் சம்பாதிக்கும் படி பார்த்துக் கொள்வார்கள். ஆனால் படித்தவர்கள் அரசியலுக்குள் வந்தால் கிரிமினலாக சிந்தித்து அடுத்தவனின் பொழப்பை கெடுப்பார்கள்! என்று பொதுவான ஒரு விமர்சனம் உண்டு. 

ஐந்தாம் கிளாஸை கூட தாண்டாமல், அரசியலுக்குள் நுழையும் கடாமுடா பேர்வழிகள் கூட தானும் சம்பாதித்து, சக மனுஷனும் சம்பாதிக்கும் படி பார்த்துக் கொள்வார்கள். ஆனால் படித்தவர்கள் அரசியலுக்குள் வந்தால் கிரிமினலாக சிந்தித்து அடுத்தவனின் பொழப்பை கெடுப்பார்கள்! என்று பொதுவான ஒரு விமர்சனம் உண்டு. 

இதைச் சொல்லிக் காட்டி, மாஜி அமைச்சரும், அ.தி.மு.க.வின் கொள்கைப்பரப்பு துணைச் செயலாளருமான வைகை செல்வனை சீண்டுகின்றனர் அக்கட்சியின் தலைமை கழக பேச்சாளர்கள். காரணம்? அவர் இந்த பொறுப்புக்கு வந்த பின், கழக பேச்சாளர்களுக்கு வருமானமே இல்லாமல் போய்விட்டது எனும் குமுறல்தான். சமீபத்தில் இந்த விவகாரம் பெரிதாய் எழுந்தபோது, அதை மறுத்த வைகை செல்வன் ‘கழக பேச்சாளர்களுக்கு வழக்கம்போல் வாய்ப்பு வழங்கப்படுகிறது.’ என்று குறிப்பிட்டிருந்தார். 

ஆனால் இதை வன்மையாக எதிர்க்கும் பேச்சாளர்கள் “மாஜி அமைச்சர் வளர்மதி, எங்களுக்கு பொறுப்பாளராக  இருந்தவரையில் ஏ, பி மற்றும் சி  கேட்டகரி பேச்சாளர்களை வரவழைத்து குறிப்பிட்ட தொகையை கொடுப்பார். பின், டூர் மேப் போட்டுக் கொடுத்து அனுப்புவார். ஒவ்வொரு பாயிண்டிலும் ரூபாய் பத்தாயிரம் வீதம் ஐம்பதாயிரம் கிடைத்து வந்தது. ஆனால் வைகை செல்வன் இந்த பொறுப்புக்கு வந்ததில் இருந்து இப்படி முன்பணம் கொடுக்கப்படுவதில்லை. அந்தந்த மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவு போட்டு, பேச்சாளர்களுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்காமல் பண்ணிவிட்டார்.

 

 இவர் வந்த பிறகு எங்களுக்கு சம்பாத்தியத்துக்கு வழியில்லாமல் செய்துட்டார். எங்களின் வயிற்றில் அடிக்கிறார் வைகைசெல்வன். விரைவில் அவர் மீது புகார்களை சொல்லி, முதல்வரை சந்திக்க இருக்கிறோம்.” என்று குமுறியுள்ளனர். வைகை செல்வன் மீது புகார் வாசிக்க இருப்போர் பட்டியலில் நாஞ்சில் அன்பழகன், நிர்மலா பெரியசாமி, சக்தி சிதம்பரம் ஆகியோர் முன்னணியில் நிற்கிறார்களாம். இவர்கள் தங்கள் துறையில் ஏற்கனவே நன்கு சம்பாதித்தவர்களே ஆனால் பாவம் கீழ் நிலை பேச்சாளர்களின் வாழ்க்கைக்காக இவர்கள் இந்த ரச்னையை கையில் எடுக்கிறார்களாம். வைகை மீது கை வைப்பாரா முதல்வர்?

click me!