உண்மையாகவே பட்டிலின மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால் இதை செய்திருக்கலாமே.. திருமாவை வச்சும் செய்யும் H.ராஜா

By vinoth kumarFirst Published Mar 14, 2023, 12:53 PM IST
Highlights

முரசொலி கட்டிடம் தொடங்கி தமிழக முழுவதிலும் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டுக் கொடுக்க பாஜக அறைகூவல் விடுகிறது எங்கே இதனை திருமாவளவன் ஆதரிப்பாரா? முரசொலி உட்பட பஞ்சமி நிலத்தை மீட்டு தர பாஜக நடத்தும் போராட்டத்தில் திருமாவளவன் பங்கேற்பாரா என நேரடியாகவே அழைக்கிறோம். 

திராவிட கட்சிகள் பட்டியலின மக்களுக்கு அநீதி செய்கிறது. அவர்கள் மீது தாக்குதல் நடத்திவரும் திமுகவுடன் திருமாவளவன் எதற்காக கூட்டணி வைத்துள்ளார் என எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். 

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா;- திமுக அரசு பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது. அவர்களை அம்பேத்கர்தான் தட்டிக்கேட்க வேண்டும். எனவே தான் அவரது சிலைக்கு மனு கொடுத்து உள்ளோம். இதுவரை பட்டியலின சமூகத்திற்கு கடந்த 2 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து 10,446 கோடி ரூபாயை செலவு செய்யாமல் திருப்பி அனுப்பி வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளது. திராவிட கட்சிகள் பட்டியலின மக்களுக்கு அநீதி செய்கிறது. அவர்கள் மீது தாக்குதல் நடத்திவரும் திமுகவுடன் திருமாவளவன் எதற்காக கூட்டணி வைத்துள்ளார். வெளியேறிவிடலாமே என கேள்வி எழுப்பினார். 

Latest Videos

பட்டியலின மக்கள் மீது திருமாவளவனுக்கு அக்கறை இருந்தால் வேங்கை வயல் சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யும் வரை நகரமாட்டேன் எனக்கூறி இருக்கலாமே. அச்சம்பவத்தில் திமுக கவுன்சிலர் ஈடுபட்டதாக கூறுவதால் அவர் போராட்டம் நடத்தவில்லை. திருமாவளவனுக்கு பட்டியலின மக்கள் மீதான நலன் இல்லை என்பதை பட்டியலின சமுதாய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

முரசொலி கட்டிடம் தொடங்கி தமிழக முழுவதிலும் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டுக் கொடுக்க பாஜக அறைகூவல் விடுகிறது எங்கே இதனை திருமாவளவன் ஆதரிப்பாரா? முரசொலி உட்பட பஞ்சமி நிலத்தை மீட்டு தர பாஜக நடத்தும் போராட்டத்தில் திருமாவளவன் பங்கேற்பாரா என நேரடியாகவே அழைக்கிறோம். ஆர்.எஸ்பாரதி பேசாமல் இருக்க வேண்டும் இல்லையென்றால் பேசாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் செய்வோம் என்றார். நெருக்கடி நிலையின் போது திமுகவினர் எந்தளவு தைரியசாலிகளாக இருந்தனர் என்பது எங்களுக்கு தெரியும் என எச்.ராஜா விமர்சனம் செய்துள்ளார். 

click me!