விஜயை தெறிக்கவிட்ட தேசபக்தர் எச்.ராஜா..!

 
Published : Oct 20, 2017, 01:45 PM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
விஜயை தெறிக்கவிட்ட தேசபக்தர் எச்.ராஜா..!

சுருக்கம்

h raja criticize actor vijay

பல்வேறு பிரச்னைகளைக் கடந்து விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் தீபாவளிக்கு வெளியானது. மெர்சல் திரைப்படம் வெளியானபிறகும் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்துவருகிறது.

மத்திய அரசின் திட்டங்களான பணமதிப்பிழப்பு நடவடிக்கை, டிஜிட்டல் இந்தியா திட்டம், ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஆகியவற்றிற்கு எதிரான வசனங்களும் காட்சிகளும் மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலங்களவை எம்.பி இல.கணேசன் ஆகிய பாஜக தலைவர்கள், மத்திய அரசை விமர்சிக்கும் வகையிலான உண்மைக்குப் புறம்பான வசனங்களை மெர்சல் திரைப்படத்திலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவும் தன் பங்குக்கு விஜயை விளாசியுள்ளார்.

மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி தொடர்பான வசனங்கள், விஜயின் பொருளாதார அறிவீனத்தையே காட்டுவதாகவும் சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் என்பது பொய் எனவும் இந்தியாவில் பள்ளிக்கல்வி மற்றும் மருத்துவம் இலவசம்தான் எனவும் தனது டுவிட்டர் பக்கத்தில் எச்.ராஜா பதிவிட்டுள்ளார்.

விஜயை கிறிஸ்தவர் என சுட்டிக்காட்டும் விதமாக அவரது பெயரை ஜோசஃப் விஜய் என எச்.ராஜா பதிவிட்டுள்ளார். ஜோசஃப் விஜயின் மோடி வெறுப்பே மெர்சல் எனவும் பதிவிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!