போக்குவரத்து கழக பணிமனை இடிந்து விழுந்ததற்கு பொறுப்பற்ற நிர்வாகமே காரணம்; முத்தரசன் கடும் கண்டனம்!

 
Published : Oct 20, 2017, 01:24 PM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
போக்குவரத்து கழக பணிமனை இடிந்து விழுந்ததற்கு பொறுப்பற்ற நிர்வாகமே காரணம்; முத்தரசன் கடும் கண்டனம்!

சுருக்கம்

Condemned Muthrasan

பொறையாரில் போக்குவரத்து கழக பணிமனை கட்டடம் இடிந்து விழுந்ததற்கு பொறுப்பற்ற நிர்வாகமே காரணம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். 

நாகை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த பொறையாரில் அரசு போக்குவரத்துக்கழக பணிமணையில் உள்ள உழியர்களுக்கான ஓய்வறையின் மேற்கூரை இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

கட்டடத்தில் தூங்கிக் கொண்டிருந்த அரசு போக்குவரத்து ஊழியர்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  அவர்களில் 7 பேர் ஓட்டுநர்கள். ஒருவர் நடத்துனர். 

படுகாயம் அடைந்த 3 பேர் காரைக்கால் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.  இந்நிலையில் காரைக்கால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெங்கடேசன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இதையடுத்து இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் பொறையார் போக்குவரத்து கழக பணிமனையின் ஊழியர்கள் ஓய்வறை முற்றிலும் இடிக்கப்படுகிறது. இதற்காக 2 பொக்லைன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இடிந்த இந்த கட்டடம் சரியாக பராமரிக்கப்படாமலும், சீரமைப்பின்றியும் இருந்ததே இந்த விபத்து ஏற்பட காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

கட்டடம் இடிந்து விழுந்ததற்கு பொறுப்பற்ற நிர்வாகமே காரணம் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உயிரிழப்புக்கு காரணமனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!