தார் கொள்முதலில் 1000 கோடி ரூபாய் ஊழல்  !!  4 வாரங்களுக்குள் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற்ம் அதிரடி உத்தரவு !!!

 
Published : Oct 20, 2017, 12:19 PM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
தார் கொள்முதலில் 1000 கோடி ரூபாய் ஊழல்  !!  4 வாரங்களுக்குள் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற்ம் அதிரடி உத்தரவு !!!

சுருக்கம்

bitumen purchase corruption High court order

தார் கொள்முதல் செய்த வழக்கில் தமிழக அரசு  4 வாரத்தில் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெடுஞ்சாலைத்துறையில் சாலை பராமரிப்புக்கு தார் வாங்கியதில் 1000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதால் சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என பாலாஜி என்பவர்  சென்னை  உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில்  ஒவ்வோர் ஆண்டும் சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்திற்காக நெடுஞ்சாலை துறைக்கு 3 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த நிதி மூலம் சாலை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தாரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. அதில் தாரின் விலை ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறுபடும். 2014ல் ஒரு மெட்ரிக் டன் தாரின் விலை 41 ஆயிரத்து 360 ஆக இருந்தது.

 மார்ச் 2015ல் ஒரு மெட்ரிக் டன் தார் 30 ஆயிரத்து 260ஆக குறைந்தது. இந்த வித்தியாசத்தை கணக்கில் காட்டப்படுவதில்லை. இந்த தொகையை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தங்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.

2015-2016ம் ஆண்டில் ஒரு மெட்ரிக் டன் 31 ஆயிரத்து 100 என்ற நிலையில் கொள்முதல் செய்யப்பட்டது.

அதே நேரத்தில் இந்த விலை மார்ச் 2016ல் 23 ஆயிரத்து 146 ஆக குறைந்தது. இதில் வித்தியாச தொகை 7 ஆயிரத்து 954 ஒரு டன்னுக்கு இவ்வளவு என அதிகாரிகள் கணக்கில் காட்டுவதில்லை. ஒவ்வோர் ஆண்டும் 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு சாலைகள் பராமரிக்கப்படுகின்றன.

ஒரு கிலோ மீட்டர் பராமரிக்க 100 டன் தார் தேவைப்படுகிறது. இந்த கணக்கில் பார்க்கும்போது 4 லட்சம் டன் தார் கொள்முதல் செய்யப்படுகிறது.



இந்த வகையில் 2014-2015  444 கோடியும், 2015-2016 318 கோடி என  மொத்த இந்த இரண்டு ஆண்டுகளில் 762 கோடி ரூபாய் ஊழல் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அதற்கு முரணாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலை ஒப்பந்ததாரர்களுடன்  சேர்ந்துகொண்டு அவர்கள் பங்கிட்டு கொள்கிறார்கள். இந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய் வரை தார் வாங்குவதில் ஊழல் நடத்துள்ளது. எனவே இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்ததது.

இந்த மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, எம். சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கு விவரம் குறித்து 4 வாரங்களுக்கும் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

 

 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!