நீதிமன்றத்தை அவமதித்த ஹெச்.ராஜா... பல மாதங்களுக்கு பிறகு சிக்கவைத்த தி.க. நிர்வாகி..!

By vinoth kumarFirst Published Jan 23, 2020, 12:46 PM IST
Highlights

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மெய்யபுரத்தில் 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த ஊர்வலம் செல்ல இருந்த பகுதியில் உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதாக அப்பகுதி போலீசார் ஊர்வலத்தைத் தடுத்துள்ளனர். இதையடுத்து, ஊர்வலத்தை தடுத்த போலீசாரை எதிர்த்து ஹெச்.ராஜா கடுமையாக விமர்சனம் செய்தார்.

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீதான வழக்கில் 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிடப்பட்டுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மெய்யபுரத்தில் 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த ஊர்வலம் செல்ல இருந்த பகுதியில் உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதாக அப்பகுதி போலீசார் ஊர்வலத்தைத் தடுத்துள்ளனர். இதையடுத்து, ஊர்வலத்தை தடுத்த போலீசாரை எதிர்த்து ஹெச்.ராஜா கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும், போலீசார் லஞ்சம் வாங்கிக்கொண்டு செயல்படுவதாக விமர்சித்த அவர் உயர்நீதிமன்றத்தையும் அவமதித்து தரக்குறைவான வகையில் கருத்துக்களைத் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக வீடியோ வைரலானது. 

இதுதொடர்பாக ஹெச்.ராஜா மீது திருமயம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தானாக முன்வந்து விசாரித்த போது ஹெச்.ராஜா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டதால் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. 

இதனிடையே,  தந்தை பெரியார் திராவிட கழகம் துணைத்தலைவர் துரைசாமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கில் திருமயம் காவல் ஆய்வாளர், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். 

click me!