ரஜினியுடன் கூட்டணிபோடும் ராமதாஸ்...? பெரியார் விவகாரத்தில் மௌனம் காக்கும் சமுகநீதி போராளி...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 23, 2020, 12:41 PM IST
Highlights

பெரியார் குறித்து ரஜினி பேசியதற்கு இதுவரையில் பாமக நிறுவனர்  ராமதாஸ் எந்தவிதமான  எதிர்ப்போ,  ஆதரவோ காட்டாமல் மௌனம்காத்து வருவது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது . 

பெரியார் குறித்து ரஜினி பேசியதற்கு இதுவரையில் பாமக நிறுவனர்  ராமதாஸ் எந்தவிதமான  எதிர்ப்போ,  ஆதரவோ காட்டாமல் மௌனம்காத்து வருவது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது .   தன் சமூகநீதி அரசியலுக்கு பெரியார் ,  அம்பேத்கர் உள்ளிட்டோரை முன்மாதிரியாக ஏற்று பாட்டாளி மக்கள் கட்சி  என்ற அரசியல் கட்சியை உருவாக்கியவர் அக்கட்சியின் நிறுவியவர் டாக்டர் ராமதாஸ் ,  தைலாபுரம் தோட்டத்தில் கூட அம்பேத்கர் பெரியார் சிலைகளை நிறுவி உளப்பூர்வமாக மரியாதை செலுத்தி வருகிறார் அவர்.  அதுமட்டுமில்லாமல் ரஜினி - பாமக என்றாலே ஏழாம் பொருத்தம் என்ற நிலையே இருந்து வந்ததை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.   கடந்த 2004ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது அப்போது திமுகவுக்கு ஆதரவாக இருந்தவர் நடிகர் ரஜினிகாந்த் , ஆனால் அந்த லோக்சபா தேர்தலில் பாமக போட்டியிட்ட ஆறு தொகுதிகளில் மட்டும் ரஜினி ரசிகர்கள் பாமகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தனர் . 

அதற்கு காரணம் ரஜினியே வெளிப்படையாக பாமகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்யுங்கள் என அறிக்கை  வெளியிட்டது தான்,  அதைத் தொடர்ந்து  பாமகவுக்கும்  ரஜினிகாந்துக்கு மிகக்கடுமையான உரசல்கள்  ஏற்பட்டது ,  அப்போது ரஜினியை எதிர்த்து பொதுக் கூட்டங்களில் பேசிய ராமதாஸ் ரஜினி சேற்றில்  விழுந்துகிடக்கும் ஜந்து என விமர்சித்தார் ,  அதோடு கர்நாடகாவில் கூட்டமொன்றில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் வீரப்பனை சுட்டுக் கொலை செய்யவேண்டும் என்று பேசியது பாமகவினரையும்  வன்னியர்களை வெறுப்படையச் செய்தது ,  இதனையடுத்து ரஜினி நடிக்கும் திரைப்படங்களை பாமகவினரும்  வன்னியர்களும் புறக்கணிக்க வேண்டுமென ராமதாஸ் வெளிப்படையாக அறிவித்தார் ,  அத்துடன் ரஜினி நடித்த பாபா திரைப்படத்தை எதிர்த்து பாமகவினர் போராட்டம் நடத்தினர் அதன் பின்னர் ஏற்பட்ட அரசியல் மற்றங்கள் காலச் சூழல்கள் பாமக ரஜினியை எதிர்ப்பை கொஞ்சகொஞ்சமாக நீர்த்துபோக வைத்தது .  

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பெரியாரை விமர்சித்து கூறியிருக்கும்  கருத்து அரசியல் களத்தை சூடாக்கி உள்ளது, இதில் அதிமுகவும் திமுகவும் ஒருசேர ரஜினியை கண்டித்துள்ளன ,  ஆனால் தான் கைகொண்டுள்ள சமூகநீதி கருத்துக்கு தன் அரசியல்  ரோல்மாடலாக பெரியாரை முன்வைத்து இயங்கி வரும் ராமதாஸ் பெயரளவுக்கு கூட ரஜினியை எதிர்க்கவோ, கண்டிக்கவோ அல்லது விமர்சிக்கவோ செய்யாமல் அமைதி காத்து வருகிறார் . இது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சமீபத்தில் கோவாவில் நடந்த திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ரஜினியை பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்தி இருந்தார் பெரியார் விவகாரத்திர் ராமதாஸின் மௌனம்,  2021 தேர்தலில்  ரஜினி ராமதாஸ் கூட்டணி உருவாகிறதா என்ற கேள்வியும் எழுப்பியுள்ளது,   ஒருவேளை எதிர்காலத்தில் ரஜினியுடன் கூட்டணி சேர வாய்ப்புள்ளது என்பதால்தான் சமூக நீதிப் போராளி ராமதாஸ் ரஜினியுடன் சமாதானமாகப் போகிறார் என்றும் பலர் விமர்சித்து வருகின்றனர் .
 

click me!