கனிமொழி பேசுவது பொய்மொழி... 1989-ல் கனிமொழி இந்தி மொழி பெயர்த்ததாக ஹெச்.ராஜா சீற்றம்!!

By Asianet TamilFirst Published Aug 10, 2020, 8:41 PM IST
Highlights

போலி முகத்தை காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியே கனிமொழியின் இந்த பொய் மொழி என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி தொகுதி எம்.பி கனிமொழி டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கனிமொழியிடம் இந்தியில் பேசியுள்ளார். அதற்கு கனிமொழி, ‘தனக்கு இந்தி தெரியாது. தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுங்கள்’ எனக் கேட்டுள்ளார். ஆனால், அந்த அதிகாரி கனிமொழியை பார்த்து, ‘நீங்கள் இந்தியர்தானே..?’ இந்தி தெரியாதா எனக் கேட்டதாக கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில்  தெரிவித்திருந்தார்.

 
இந்த நிகழ்வுக்கு கனிமொழிக்கு ஆதரவாக பல தலைவர்களும் கருத்து தெரிவித்திருந்தனர். பாஜகவைச் சேர்ந்த தலைவர்கள் இதை விமர்சித்துவருகிறார்கள். கறுப்பர் கூட்டத்துக்கு எதிராக இந்துக்கள் எழுச்சியை திசை திருப்ப கனிமொழி நாடகம் போடுகிறார் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஹெச்.ராஜா மீண்டும் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு தகவலைப் பதிவிட்டுள்ளார்.
அதில், “கனிமொழியின் ட்வீட் ஒரு பொய் மொழி. ஏனெனில் தேவிலால் 1989ல் தமிழகம் வந்தபோது அவரது இந்தி உரையை தமிழில் மொழிபெயர்த்தது கனிமொழி. எனவே அவருக்கு இந்தி தெரியாது என்று பொய்யுரைத்துள்ளது போல் சம்பவமே மலிவான மொழி சர்ச்சையே என்பது தெளிவு. தேசிய கல்விக் கொள்கை பற்றிய சர்ச்சையை திமுக மற்றும் அதன் இலவச இணைப்புகள் எழுப்பியதும் இவர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தி போதிக்கப்படுவது மற்றும் இவர்கள் குழந்தைகள், பேரக் குழந்தைகள் 3 மொழிகள் படிப்பது பற்றி நாம் கேள்வி எழுப்பியதும் தங்கள் போலி முகத்தை காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியே இந்த பொய் மொழி.” என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

click me!