சிஐஎஸ்எப் அதிகாரிகள் விசாரணைக்கு கனிமொழியை அழைக்க வேண்டும்.! பின்னியெடுக்கும் ஹெச்.ராஜா.!

By T BalamurukanFirst Published Aug 10, 2020, 8:33 PM IST
Highlights

முதலில் இப்படி ஒருசம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை.சிஐஎஸ்எப் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அது கனிமொழி அவர்களையும் அழைத்து விசாரிக்க வேண்டும்.என பாஜக பிரமுகர் ஹெச்.ராஜா கோரிக்கை வைத்துள்ளார்.
 


முதலில் இப்படி ஒருசம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை.சிஐஎஸ்எப் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அது கனிமொழி அவர்களையும் அழைத்து விசாரிக்க வேண்டும்.என பாஜக பிரமுகர் ஹெச்.ராஜா கோரிக்கை வைத்துள்ளார்.

இந்தி தெரியாது என்று சொன்னதால் நீங்கள் இந்தியரா? என்று விமானநிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் திமுக எம்பி கனிமொழியை பார்த்து கேட்டது மும்மொழிக்கொள்கை அமல்படுத்தும் நேரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? "இந்தி"யாவா? பன்முகத்தன்மைக்கு புதைகுழி தோண்டுகிறவர்களே அதில் புதையுண்டு போவார்கள்.திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ள நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹெச்.ராஜா இப்படியொரு கருத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

முதலில் இப்படி ஒருசம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை.சிஐஎஸ்எப் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அது கனிமொழி அவர்களையும் அழைத்து விசாரிக்க வேண்டும். திக் திமுகவின் கருப்பர் கூட்ட கயமைக்கு எதிராக ஏற்பட்டுள்ள இந்து எழுச்சியை திசை திருப்பும் முயற்சியாகவும் இது இருக்கலாம் என்று பாஜக பிரமுகர் ஹெச். ராஜா திமுகவை கடிந்துள்ளார்.


சென்னை விமானநிலையத்தில் கனிமொழி எம்பிக்கு  நிகழ்ந்த மொழிரீதியான அவமதிப்பு சாதாரணமானதல்ல.  தமிழ்மட்டுமே அறிந்த சாதாரண குடிமக்கள் என்னபாடு படவேண்டியிருக்கும்?தமிழ்நாட்டிலேயே தமிழுக்கு இடமில்லாமல்,ஹிந்தி திணிக்கப்படுமென்றால் அது நிச்சயம் நமது தன்மானத்திற்கு விடப்படும் சவால்தான்.என்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார்.

click me!