குட்கா ஊழல் உண்மையாக இருந்தால் சிபிஐ நடவடிக்கை எடுத்துக்கலாம்.. ஜெயக்குமார் ஓபன் டாக்!

Published : Sep 07, 2018, 11:18 AM ISTUpdated : Sep 09, 2018, 08:12 PM IST
குட்கா ஊழல் உண்மையாக இருந்தால் சிபிஐ நடவடிக்கை எடுத்துக்கலாம்.. ஜெயக்குமார் ஓபன் டாக்!

சுருக்கம்

குட்கா விவகாரத்தில் விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள், முகாந்திரம் இருந்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கலாம் என அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் கூறினார்.

குட்கா விவகாரத்தில் விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள், முகாந்திரம் இருந்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கலாம் என அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் கூறினார். சென்னை விமான நிலையத்தில், அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் அளித்த பேட்டியில் தற்போது, சிபிஐ அதிகாரிகள் அமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தினர். அதன்பேரில் அவர்களுக்கு சந்தேகப்படும்படி உள்ளவர்களை மட்டும் கைது செய்துள்ளனர். காரணம் அவர்கள் குற்றம் செய்துள்ளனர். 

மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கு காரணம், சிபிஐ அதிகாரிகளிடம் புகார் மட்டுமே உள்ளது தவிர, அதற்கான முகாந்திரம் இல்லை. இதனால், அவர்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. முகாந்திரம் இருக்கிறதா என விசாரணை நடத்திய பின்னர், அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.

 

சிபிஐ அதிகாரிகள், அரசியல் கட்சிகளுடன் பாடம்நடத்த கூடாது. தவறு செய்தால், உரிய நடவடிக்கை எடுக்கட்டும். விசாரணையின் முடிவில் அனைத்தும் வெளியே வரும். இவ்வாறு அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!