குரு மூர்த்தியின் "கழிசடை" கூற்று.. கண்டியுங்கள் நிதி அமைச்சரே.. மதுரை எம்.பி ஆவேசம்.

Published : May 13, 2022, 05:13 PM IST
 குரு மூர்த்தியின் "கழிசடை" கூற்று..  கண்டியுங்கள் நிதி அமைச்சரே.. மதுரை எம்.பி ஆவேசம்.

சுருக்கம்

வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கழிசடைகள் என கூறிய துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியை சீதாராமன் வெளிப்படையாக கண்டிக்க வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கழிசடைகள் என கூறிய துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியை சீதாராமன் வெளிப்படையாக கண்டிக்க வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். கழிசடை என்றால் உதிர்ந்த ரோமம் என்று பொருள், அவரின் இந்த பேச்சு லட்சக்கணக்கான வாங்கிய ஊழியர்களை காயப்படுத்தி உள்ளது என்றும் அவர்  குறிப்பிட்டுள்ளார். துக்ளக் ஆண்டு விழா ஆண்டுதோறும் ஜனவரி 14ஆம் தேதி நடப்பது வழக்கம். ஆனால் இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மே 8ஆம் தேதி அந்த விழா நடந்தது. அதில் நிதியமைச்சர் நிர்மலாசீத்தாராமன் கலந்து கொண்டார். அதில் உரையாற்றிய அந்த இதழின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, பிரதமர் மோடி, மத்திய அரசின் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரை பாராட்டி பேசினார்.

வழக்கம் போல திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளை விமர்சித்தார். ஒன்றிய அரசு என தமிழக அரசு அழைப்பது கேவலம், தேசவிரோதம் என்றார். தேசிய அரசாங்க வங்கிகளில் பணியாற்றுகிறவர்கள் கழிசடைகள்  என்றும் அவர் கூறினார். இது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அப்போது மேடையிலிருந்த நிர்மலா சீதாராமன் அதைக் கேட்டு முகம் சுளித்தவாறு இல்லை என தலையாட்டினார், ஆனால் அதன் பிறகு அது குறித்து அவர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.  இந்நிலையில் குருமூர்த்தியின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவரின் இந்த பேச்சை நிர்மலா சீதாராமன் கண்டிக்காதது ஏன் என்றும் பலர் கேள்வி எழுப்புகின்றனர். இந்நிலையில் மதுரை கம்யூனிஸ்ட் எம். பி சு வெங்கடேசன், குருமூர்த்தியின் கழிசடை கூற்றை கண்டியுங்கள் நிதியமைச்சரே என்ற தலைப்பில் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தின் விவரம் பின்வருமாறு :-  

துக்ளக் விழாவில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் முன்னிலையில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, வங்கி அதிகாரிகளை ஊழியர்களை கழிசடைகள் என்று வசைமாரி பொழிந்துள்ளார். மிக நாகரீகமாக பொருள் கூறினால், உதிர்ந்த ரோமம் என்பதே. லட்சக்கணக்கான வங்கி ஊழியர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளார்கள். வங்கி அலுவலர்களோடு குருமூர்த்தியின் விமர்சனம் நிற்கவில்லை. சிவிசி போன்ற அமைப்புகளின் செயல்பாடுகளையும் தர்க நியதி இல்லாமல் விமர்சனம் செய்துள்ளார். அதற்கு தீர்வாக அரசின் பங்குகளை அரசு வங்கிகளில் 51 சதவீதத்தில் இருந்து 49 சதவீதத்திற்கு குறைப்பதே வழி என்றும் கூறியுள்ளார். தனியார் நிதி நிறுவனங்களில் என்ன நடக்கிறது என்பது பற்றி வரும் செய்திகளை மக்கள் அறிவார்கள், அமலாக்கப்பிரிவு ஒரு பிரபல தனியார் வங்கியில் உயர் பொறுப்பில் இருந்தவர்கள் பற்றி தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கை பல கதைகளை பேசுகிறது.

உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்களை ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்து விட்டு அவர்களின் முன்னிலையிலேயே அநாகரிகமாக பேசியிருக்கிறார். மேலும் வங்கி ஊழியர்கள் நிதி அமைச்சரின் கீழ் பணியாற்றுபவர்கள் கொரோனா காலத்தில் அளப்பரிய பணியை பல இன்னல்களுக்கு மத்தியில் ஆற்றி உள்ளார்கள். அதை அக்கூட்டத்தின் நிதியமைச்சரின் உரையும் அங்கீகரிக்கின்றது. நிதி அமைச்சர் அவர்களே குருமூர்த்தி அவர்களின் நாகரீகமான வார்த்தைகளை வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டும். அந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள், குருமூர்த்தி உள்ளிட்டோருக்கு எந்த பகுதி தொழிலாளர்களின் கவுரவத்தையும் பாதிக்கும் வகையிலான பொறுப்பற்ற பேச்சுக்கள் பொது நிகழ்ச்சிகளில் பேசக்கூடாது என அறிவுறுத்த வேண்டும். உடனடியாக அவர் வகிக்கும் உயர் பொறுப்பில் மதிப்பை சீர்குலைக்கும் விதத்தில் கழிசடை கூற்றை நிதியமைச்சர் கண்டிப்பார் என நம்புகிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!