'அண்ணாமலை தான் முதலமைச்சர்' நடிகர் ரஜினி சொன்ன சீக்ரெட்டை உடைத்த குருமூர்த்தி

By Ajmal Khan  |  First Published Jan 15, 2024, 9:51 AM IST

தமிழகத்தின் முதல்வர் வேட்பாளர் ஆக அண்ணாமலை இருக்க வேண்டும் என்பதை விரும்புபவர்கள் என்னை காட்டிலும் யாரும் தீவிரமாக இருக்க முடியாது என கூறிய குருமூர்த்தி, நிம்மதியாக இருந்த மனிதன், தற்போது நிம்மதியெல்லாம் ஓரமாக வைத்து அரசியலில் இறங்கியுள்ளதாக தெரிவித்தார். 


அதிமுக ஒரு கட்சியே கிடையாது

துக்ளக் வார இதழ் 54வது ஆண்டு நிறைவு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துக்ளக் வார இதழின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி கலந்து கொண்டார். அப்போது அவரிடம் அந்த பத்திரிகையின் வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.  வட இந்தியர்கள் தென் இந்தியர்கள் என பிரிவினை பேசு பிரச்சாரம் செய்வது குறித்து கேள்விக்கு பதில் அளித்தவர், நாட்டில் மக்களை  பிரித்து அரசியல் பேசுவது அதிகமாகி விட்டது. இந்த மாதிரி பேசுவது ஃபேஷன் ஆகி விட்டது.

Latest Videos

பாஜகவை பார்த்து அஞ்சும் தமிழக அரசியல் கட்சிகள் குறித்து? பாஜகவை பார்த்து மற்ற அரசியல் கட்சிகள் அஞ்சுவதற்கு காரணம் அது பெரிய சித்தாந்தம். ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் பல ஆண்டு தியாகம் உள்ளது. அதிமுக என்பது ஒரு கட்சியே கிடையாது. அதற்கு இரட்டை இலை தான் தலைவர். பாஜக அதை தள்ளியும் வைக்க கூடாது. தழுவவும் கூடாது என்பது  பாஜக நிலைப்பாடு என கூறினார். 

பொது சிவில் சட்டம்

பொது சிவில் சட்டம் குறித்த சாதக பாதகங்கள்? குறித்த கேள்விக்கு பதில அளிக்கையில், அரசியல் அமைப்பு சட்டத்தில் இருந்தும் பொது சிவில் சட்டம் இத்தனை ஆண்டுகள் வர முடியாததர்க்கு காரணம் அரசியல் தான். அதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கான தயாரிப்பு பணிகளை பாஜக விரைவில் செய்ய வேண்டும். ஹிந்து மதம் ஏன் ஒற்றுமை இல்லை? என்ற கேள்விக்கு குருமூர்த்தி பதில் அளிக்கையில், உலகம் முழுவதும் ஒற்றுமையை வலியுறுத்திய ஒரே மதம் ஹிந்து மதம் தான். இஸ்லாமிய மார்க்கத்தில்,கிறித்தவ மார்க்கத்தில் எத்தனையோ வேற்றுமைகள் உள்ளது. இந்துக்கள் ஒற்றுமை இல்லாதவர்கள் என்று சொல்ல முடியாது. மற்றவரை எதிர்த்து இந்துக்கள் ஒன்று சேரவில்லை அது என்னை பொறுத்த வரை தேவை இல்லை என்பது எனது கருத்து

அண்ணாமலை முதலமைச்சர் வேட்பாளர்

தமிழகத்தில் துணை முதல்வர் பதவி குறித்த கேள்விக்கு, தமிழ்நாட்டில் துணை முதல்வர் குறித்து அறிவித்தால் அந்த கட்சிக்கு நல்லது இல்லை ஆனால் அவர்களது குடும்பத்துக்கு வேண்டும் என்றால் நல்லதாக அமையலாம்.  2026 அண்ணாமலை முதல்வர் வேட்பாளர் அறிவிக்க படுவாரா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில்,  2024 இல் பாஜக எந்த அளவுக்கு தமிழகத்தில் இருப்பை கான்பிக்கிறதோ.  அந்த அளவுக்கு 2026 தமிழகத்தில் பாஜக இருப்பை காண்பிக்கும்.

தமிழகத்தின் முதல்வர் வேட்பாளர் ஆக அண்ணாமலை இருக்க வேண்டும் என்பதை விரும்புபவர்கள் என்னை காட்டிலும் யாரும் தீவிரமாக இருக்க முடியாது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்,  ரஜினி அரசியலில் தீவிரமாக வர முன்பு  நினைத்தார். அப்போது என்னிடம் பேசும்போது சொன்னார் நான் முதலமைச்சராக வர மாட்டேன் என கூறினார். 

பாஜகவின் நம்பிக்கை நட்சத்திரம் அண்ணாமலை

நான் கேட்டேன் நீங்கள் இல்லாவிட்டால் யாரை முதல்வராக ஆக்குவீர்கள் என கேள்வி எழுப்பினேன். அதற்கு ரஜினி உங்களுக்கு தெரியுமா.? அண்ணாமலை என்ற ஒருவர் இருக்கிறார் என கூறினார். அண்ணாமலையை பேப்பரில் கேள்விபட்டேன். இது அண்ணாமலைக்கு தெரியுமா.? தெரியாதானு தெரியாது. ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை பாஜகவின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு சேர்ந்துள்ளார். நிம்மதியாக இருந்த மனிதன், தற்போது நிம்மதியெல்லாம் ஓரமாக வைத்து அரசியலில் இறங்கியுள்ளார். பாஜகவின் நம்பிக்கை நட்சத்திரமாக அண்ணாமலை திகழ்கிறார் என குருமூர்த்தி தெரிவித்தார்.  

இதையும் படியுங்கள்

DMK FILES : திமுகவின் ஊழல் தொடர்பாக இன்னும் 14 டேப் இருக்கு... ஸ்டாலினுக்கு ஷாக் கொடுக்கும் அண்ணாமலை

click me!