நீதிபதிகள் குறித்து சர்ச்சை பேச்சு... கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து வருத்தம் தெரிவித்த குருமூர்த்தி...!

By vinoth kumarFirst Published Jan 17, 2021, 11:52 AM IST
Highlights

துக்ளக் விழாவில் நீதிபதிகள் நியமனம் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியதற்கு ஆடிட்டர் குருமூர்த்தி வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

துக்ளக் விழாவில் நீதிபதிகள் நியமனம் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியதற்கு ஆடிட்டர் குருமூர்த்தி வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

துக்ளக் இதழின் 51வது ஆண்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, நீதிபதிகளின் நியமனத்தை விமர்சித்திருந்தார். அதாவது, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவிகளுக்காக அரசியல்வாதிகள் ஆதரவை தேடுகிறார்கள் என்று கூறியிருந்தார். 

நீதிபதிகள் குறித்த குருமூர்த்தியின் விமர்சனம் சர்ச்சையை கிளப்பியது. நீதித்துறைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் குருமூர்த்தி பேசியிருப்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட கட்சிகள் கூறிவந்தன. 

இந்நிலையில், நீதிபதிகள் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியதற்கு குருமூர்த்தி வருத்தம் தெரிவித்துள்ளார். நீதிபதி பதவிக்கு விண்ணப்பித்தோர் என கூறுவதற்கு பதில், நீதிபதிகள் என்று குறிப்பிட்டு விட்டேன். நீதித்துறை, நீதிபதிகள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன்’ என்று குருமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார். 

click me!