
குஜராத் சட்டசபைத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கும் நாளில், தேர்தல் அறிக்கையை பாரதிய ஜனதா கட்சி நேற்று வெளியிட்டது. ராகுல் கேள்வி?குஜராத் சட்டசபைத் தேர்தலிலுக்கு தேர்தல் அறிக்கையை பா.ஜனதா இன்னும் வௌியிடாதது, அந்த மாநில மக்களை அவமானப்படுத்தும் செயல் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி விமர்சனம் செய்த நிலையில், இந்த அறிக்கையை அந்த கட்சி வெளியிட்டுள்ளது.மோடி, அமித் ஷா படம்பா.ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையின் முகப்பில் பிரதமர் மோடி, கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. அந்த அறிக்கையில், ‘ ஒவ்வொரு குஜராத் மக்களும் ஒரே குரலில் பேசுகிறார்கள். நான் வளர்ச்சி, நான் தான் வளர்ச்சி’’ என்ற வாசகம் இடம் பெற்று இருந்தது. தேர்தல் அறிக்கை
அகமதாபாத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், “ குஜராத் மாநிலம் குறித்து காங்கிரஸ் கட்சி தவறான வாக்குறுதிகளை அளித்து வருகிறது. ஆனால், அவை அனைத்தும் அரசியலமைப்புச் சட்டரீதியாகவும், நிதி ஆதார வகையிலும் சாத்தியமில்லாதது.
வளர்ச்சி
குஜராத் மாநிலத்தை பா.ஜனதா கட்சி 20 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது. நாட்டிலேயே அதிகமான உள்நாட்டு உற்பத்தியை தரும் மாநிலமாக குஜராத் இருந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக குஜராத் மாநிலம், சராசரியாக 10 சதவீதம் வளர்ச்சி அடைந்து வருகிறது.
மாநிலத்தின் இந்த வளர்ச்சியை தக்கவைப்பது மட்டுமல்லாமல், அதை உயர்த்தவும் பா.ஜனதா தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும். குஜராத் மாநிலத்தில் ஒற்றுமைக்கும், மாநிலத்தில் அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காகவும் பா.ஜனதா கட்சி செயல்படும்’’ எனத் தெரிவித்தார்.
இருமடங்கு வருமானம்
தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக உயர்த்தவும், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வகை செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், குஜராத் இளைஞர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட்டு, அவர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை ேமம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக பா.ஜனதா கட்சி தேர்தல் அறிக்கை என்ற வார்த்தையை பயன்படுத்தும், ஆனால், இந்த முறை ‘தொலைநோக்கு அறிக்கை’ என்று பெயரிட்டுள்ளது.