அடேங்கப்பா … 45 ஆயிரம் ரூபாய் இன்கிரீமெண்ட்டா !! யாருக்கு தெரியுமா ?

Published : Sep 20, 2018, 07:39 AM ISTUpdated : Sep 20, 2018, 07:40 AM IST
அடேங்கப்பா … 45 ஆயிரம் ரூபாய் இன்கிரீமெண்ட்டா !!  யாருக்கு தெரியுமா ?

சுருக்கம்

குஜராத் மாநில எம்எல்ஏக்களின் சம்பளம் 45 ஆயிரம் ரூபாய் உய்த்தப்பட்டுள்ளது. இதற்கான மசோதா அம்மாநில சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.இதையடுத்து குஜராத் மாநில எம்எல்ஏக்களின்  சம்பளம் ஒரு லட்சம் ரூபாயை எட்டியுள்ளது.  

குஜராத் எம்.எல்.ஏ.க்கள் தற்போது மாதாந்திர ஊதியமாக 70 ஆயிரம் ரூபாய் பெற்று வருகின்றனர். இவர்களுக்கான சம்பளத்தை உயர்த்த வேண்டும் என கடந்த ஆண்டு மசோதா கொண்டு வரப்பட்டது. அந்த மசோதா நிலுவையில் இருந்து வந்தது.

இந்நிலையில், குஜராத் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை உயர்த்தும் சட்ட மசோதா நேற்று  நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் குஜராத் சட்டசபை எம்.எல்.ஏ.க்களின் மாதாந்திர வருமானம் ரூ..45,589 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. 

இதன்படி.70,727  ரூபாயாக  இருந்த எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் தற்போது 1,16,316  ரூபாயாக ஆக உயர்ந்துள்ளது. அதாவது ரூ.45,589 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் எம்.எல்.ஏ.க்களின் தினசரி படி ரூ.200 லிருந்து ரூ.1000-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இது வேறயா ?

அண்மையில் தமிழ்நாடு, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் எம்எல்ஏக்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!