குஜராத் தேர்தலில் வாக்குப் பதிவு....எந்திரங்களில் ‘புளூ டூத்’ மோசடி

 
Published : Dec 10, 2017, 05:39 AM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
குஜராத் தேர்தலில் வாக்குப் பதிவு....எந்திரங்களில் ‘புளூ டூத்’ மோசடி

சுருக்கம்

gujarat election ...blue tooth

குஜராத் சட்டசபை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளான நேற்று வாக்குப் பதிவு எந்திரங்களில் ‘புளூ டூத்’ மோசடி நடந்திருப்பதாக காங்கிரஸ் கூறிய புகாரை, தேர்தல் ஆணையம் மறுத்து உள்ளது.

‘புளூ டூத்’ வழியாக

குஜராத் சட்டப்பேரவைக்கு நேற்று முதல்கட்டத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், போர்பந்தர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அர்ஜூன் மோத்வாடியா ஒரு பரபரப்பான மோசடி குற்றச்சாட்டை முன் வைத்தார்.

வாக்களித்துவிட்டு வெளியே வந்த அவர், "மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ப்ளூடூத் வழியாக இணைக்கப்பட்டிருப்பதாகவும், இதனை படம்பிடித்து ஆதாரமாக வைத்திருப்பதாகவும்" கூறினார்.

ஆய்வு-மறுப்பு

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் வௌியிட்டுள்ள விளக்கத்தில் கூறப்பட்டு இருப்பதாவது-

புகார் தெரிவிக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தேர்தல் அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர். எந்த ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்திலும் ‘எகோ’ என்ற பெயரிலான கருவி பொருத்தப்பட்டு இருக்கும். இதைத்தான் மோத்வாடியா தவறுதலாக புரிந்து கொண்டு ‘புளூடூத்’துடன் இணைக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்’’.

இவ்வாறு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

அகமது படேல் புகார்

முன்னதாக வேட்பாளர் அர்ஜூன் மோத்வாடியா புகாரைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் தனது டுவிட்டர் பதிவில், ‘‘பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறி இருந்தார்.

----

PREV
click me!

Recommended Stories

திமுகவும், ஃபெவிக்கால் ஃபிரண்ட்ஷிபும்..! கவர்ண்மென்ட் நடத்துறீங்களா? கண்காட்சி நடத்துறீங்களா..? பங்கம் செய்த விஜய்..!
பெரியாரும், அண்ணாவும், எம்.ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து... நீங்க மட்டும்தான் சொந்தம் கொண்டாடணுமா..? ஆத்திரப்படும் விஜய்..!