தொடங்கியது குஜராத் மாநில சட்டமன்ற முதல்கட்ட தேர்தல் !!  , 89 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு !!!

Asianet News Tamil  
Published : Dec 09, 2017, 08:52 AM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
தொடங்கியது குஜராத் மாநில சட்டமன்ற முதல்கட்ட தேர்தல் !!  , 89 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு !!!

சுருக்கம்

gujarat 1st phase elcection commenced

குஜராத் மாநிலத்தில் 89 தொகுதிகளில் இன்று காலை 8 மணிக்கு முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியுள்ளது. இன்று நடக்கும் தேர்தலில், பாஜக முதலமைச்சர் வேட்பாளர்  விஜய் ரூபானி உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்

குஜராத் மாநில சட்டசபையின் பதவிக்காலம் ஜனவரி மாதத்தில் முடிவதையடுத்து, அங்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இமாச்சலப் பிரதேச தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது குஜராத் மாநிலத்துக்கு தேதி அறிவிக்கப்படவில்லை. மாநிலத்தில் மழைவெள்ள நிவாரணப்பணிகள் நடைபெற வேண்டும் என்பதால் தாமதமாக அறிவிப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதையடுத்து,  தலைமை தேர்தல் ஆணையர்  ஏ.கே. ஜோதி, கடந்த அக்டோபர் 25-ந்தேதிகுஜராத் தேர்தல் தேதியை அறிவித்தார். டிசம்பர் 9, 14 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக குஜராத் சட்டமன்றத் தேர்தல்  நடத்தப்படும் என அறிவித்தார்.

அதன்படி, 89 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. . இதில் சவுராஷ்டிரா, தெற்கு குஜராத் மண்டலத்தில் இருந்து 977 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஏறக்குறைய 2.12 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த  வாக்குப்பதிவு மாலை 5 மணிவரை நடக்கும். வாக்குப்பதிவுக்காக 22 ஆயிரத்து 689 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஜூனாகாத், சுரேந்திரநகர்,கட்ச் , மோர்பி, அம்ரேலி, ராஜ்கோட் ஆகியவை முக்கிய மண்டலங்களாகும்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து காங்கிரஸ் , பா.ஜனதா கட்சிகள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டன. 22 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜனதா கட்சி 5-வது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க முயற்சித்து வருகிறது.

பிரதமர் மோடி, பாஜனதா தலைவர் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் என்பதால், இந்த தேர்தலில் தோல்வி அடைந்துவிடக்கூடாது என பா.ஜனதா கட்சி தீவிரமாக பிரசாரம் செய்து வந்தது.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக  ராகுல் காந்தி  பொறுப்பேற்க  உள்ள நிலையில், இந்த தேர்தல் அந்த கட்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

இந்த தேர்தலில் ராஜ்கோட்(மேற்கு) தொகுதியில் முதலமைச்சர்  விஜய் ரூபானி, காங்கிரஸ்,வேட்பாளர் சக்திசின் கோகில்(மன்டவி தொகுதி), அம்ரேலி தொகுதியில் பரேஷ் தனனி ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாகும்.

 


 

 

PREV
click me!

Recommended Stories

அடிமாடாய் போன தேமுதிக.. திமுகவில் 4 சீட்டு..! பேராசையால் மண்ணைக் கவ்விய பிரேமலதா..!
ரணகளத்திலும் குதூகலம்..! எடப்பாடிக்கு சேலஞ்சு விடும் ஸ்டாலின்..!