மத்திய அரசு நேற்று அறிவித்த பட்ஜெட்டின்படி சென்னை கிண்டி, பழவந்தாங்கல் மற்றும் ஆவடி உள்ளிட்ட 12 ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக எக்ஸ்கலேட்டர் அமைக்கப்படவுள்ளது.
மத்திய பொது பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கான சிறப்பு திட்டங்களை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நேற்று அறிவித்தார். அதன்படி , ரயில்வே துறைக்கு ரூ.1.48 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுள்ளது. அதில் முக்கியமானவைகளை பார்க்கலாம்..
4000க்கும் மேற்பட்ட ஆளில்லாத லெவல் கிராசிங்குகளில் ஆட்கள் நியமிக்கப்படுவார்கள்.
25 ஆயிரம் ரயில் நிலையங்களில் எஸ்கலேட்டர் வசதி அமைக்கப்படும்.
ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி விரிவுபடுத்தப்படும்.
ரயில் தண்டவாளங்கள் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தண்டவாளங்களுக்கு பராமரிப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படும்.
அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்படும்.
அனைத்து ரயில் நிலையங்களிலும் வை-ஃபை வசதி ஏற்படுத்தப்படும்.8.
பெரம்பூரில் அதிநவீன ரயில் பெட்டிகள் தயாரிக்கும் ஆலை அமைக்கப்படும்.
3600 கிலோ மீட்டத் தொலைவுக்கு ரயில் பாதைகள் சீரமைக்கப்படும்.
10.நாடு முழுவதும் 600 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும்.11.
2019ம் ஆண்டுக்குள் 4000 கி.மீ. தொலைவுக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும்.
நாட்டில் உள்ள 4 ஆயிரம் ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் அகற்றப்படும்.
ரூ.40 ஆயிரம் கோடி செலவில் புறநகர் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும்.
18 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு இரட்டை ரயில் பாதை திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட்படி சென்னையில் பயணிகள் நெரிசல் அதிகமுள்ள அதாவது நாள்தோறும் 25 ஆயிரம் பயணிகளுக்கு மேல் வரும் கிண்டி, ஆவடி, பழவந்தாங்கல் , திருவள்ளூர், செங்கல்பட்டு, அரக்கோணம் உள்ளிட்ட 12 ரயில்வே ஸ்டேசன்களிலும், குரோட்பேட்டை ஸ்டேசனில் கூடுதலாகவும் எக்ஸ்கலேட்டர் அமைக்கப்படவுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு சென்னை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.