
நாடு முழுவதும் ஜூலை 1 ஆம் தேதி ஜி.எஸ்.டி நடைமுறை படுத்தப்பட உள்ளது.
இதனால் பா.ஜ.க சார்பில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) நடைமுறை குறித்த கருத்தரங்கம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நேற்று கோயம்புத்தூரில் நடந்தது. இதில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கி பேசினார்.
இதன் தொடர்சியாக இன்று பாஜக சார்பாக சென்னை திருவல்லிக்கேணி கலைவாணர் அரங்கத்தில் சரக்கு மற்றும் சேவை வரி கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில், பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன், அமைச்சர் நிர்மலா சீதாராமன், கரு நாகராஜன் , அரிசி வியாபாரிகள் சங்க தலைவர் மோகன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய தமிழிசை, ஜி.எஸ்.டி பற்றிய அதிக விளக்க கருத்தரங்கம் கூட்டப்பட்டது தமிழகத்தில் மட்டுமே எனவும், ஜி.எஸ்.டி பற்றி பல விமர்ச்சனங்கள் உள்ளதால் அதை பற்றி விலக்கி கூறப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மத்திய அரசில் இருந்து எந்த திட்டம் இருந்தாலும் முதலில் எதிர்ப்பு வருவது தமிழகத்தில் மட்டுமே எனவும், ஜி.எஸ்.டி கொண்டுவரப்பட்டால் இந்தியா பொருளாதார வளர்ச்சி பெரும் எனவும் குறிப்பிட்டார்.
பொருளாதாரத்தில் வல்லரசாக மாறும் என்பதற்காக தான் ஜி.எஸ்.டி கொண்டுவரப்பட்டதாகவும், ஆனால் இதை வரி திணிப்பு என கூறி வருவது கண்டிக்கதக்கது எனவும் தெரிவித்தார்.
ஜி.எஸ்.டிக்கு பல்வேறு எதிர்ப்புகள் இருந்தும் மக்களுக்கு நல்ல திட்டத்தை கொண்டு செல்ல வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம் எனவும், ஜி.எஸ்.டிக்கு மிகப்பெரிய நினைவு சின்னம் எதிர்காலத்தில் உருவாகும் எனவும் கூறினார்.
மாநில அரசு ஜி.எஸ்.டிக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக தமிழிக நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பது வரவேற்கதக்கது என தமிழிசை தெரிவித்தார்.