ஜி.எஸ்.டி.!  29 கைவினைப் பொருட்களுக்கு வரி விலக்கு… 49 பொருட்கள் மீதான வரி குறைப்பு…. அருண் ஜெட்லி அதிரடி….

 
Published : Jan 19, 2018, 06:41 AM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
ஜி.எஸ்.டி.!  29 கைவினைப் பொருட்களுக்கு வரி விலக்கு… 49 பொருட்கள் மீதான வரி குறைப்பு…. அருண் ஜெட்லி அதிரடி….

சுருக்கம்

GST 29 Handicraft Product arun Jaitly announcement

29 கைவினைப்பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து முற்றிலும் விலக்களிக்கப்பட்டுள்ளது என்றும், 49 பொருட்களுக்கு ஜிஎஸ்டி மீதான வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது என்றும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சா் அருண் ஜெட்லி தலைமையில் 25வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் டெல்லியில் நேற்று  நடைபெற்றது. இதில் 29 பொருட்களுக்கான வரியை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.



ஜி.எஸ்.டி  நடைமுறைப்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட  6 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் அதில் உள்ள குறைபாடுகள் களையப்படவில்லை என பது மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 25வது குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. மத்திய நிதியமைச்சா் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் அமைச்சா் ஜெயக்குமார் கலந்து கொண்டார்..

கூட்டத்தின் முடிவில் அமைச்சா் அருண் ஜெட்லி பேசுகையில், 49 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டுள்ளது என்றும்,  29 கைவினைப் பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.



கேளிக்கை பூங்காக்களில் டிக்கெட் கட்டண வரி,  28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வரி விதிப்பு முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் வருகிற 25ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்றும் அருண் ஜெட்லி தெரிவித்தார்..

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவது தொடா்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என்றும், அடுத்த 10 நாட்கள்  கழித்து கானொலி காட்சி மூலம் மீண்டும் ஜி.எஸ்.டி. கூட்டம் நடைபெறவுள்ளது என்றும் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!