மாணவ, மாணவிகள் தவறாமல் தேர்வெழுதுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்... அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!!

By Narendran S  |  First Published Mar 14, 2023, 4:28 PM IST

மாணவர்களுக்கு உளவியல் கலந்தாய்வு வழங்கி அவர் தேர்வுகளை தவறாமல் எழுதுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 


மாணவர்களுக்கு உளவியல் கலந்தாய்வு வழங்கி அவர் தேர்வுகளை தவறாமல் எழுதுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக நடப்பு ஆண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று மொழிப்பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில், நேற்று (மார்ச் 13) நடைபெற்ற மொழித் தேர்வை 50 ஆயிரம் பேர் எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மாணவர்களுக்கு உளவியல் கலந்தாய்வு வழங்கி அவர் தேர்வுகளை தவறாமல் எழுதுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: 88 மாசம் ஆச்சு! செலவை அவங்க எப்படி சமாளிக்க முடியும்? போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு குரல் கொடுக்கும் ராமதாஸ்!

Latest Videos

இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், தமிழ்நாட்டில் நேற்று தொடங்கிய 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் தமிழ் மொழிப்பாடத் தாளை 50,674 மாணவர்கள் எழுதவில்லை என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மொத்த மாணவர்களில் சுமார் 7% மாணவர்கள் தேர்வை எழுதாதது இதுவே முதல் முறை. இது அதிர்ச்சியளிக்கிறது. கொரோனா பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதாதது, தொடர்ந்து வகுப்புகள் நடத்தப்படாதது போன்றவற்றால் ஏற்பட்ட அச்சம் ஆகியவை தான் பெரும்பான்மையான 12 ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் தேர்வையே எழுதாததற்கு காரணம் என்று உளவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: தமிழ் தேர்வை எழுதாத 50,000 மாணவர்கள்! இது அனைத்து அரசியல்வாதிகளுக்கும் இது ஒரு தலை குனிவு!வேதனையில் விஜயகாந்த்

அச்சம் காரணமாக அடுத்து வரும் தேர்வுகளையும் இந்த மாணவர்கள் எழுதாமல் இருப்பதற்கு வாய்ப்புள்ளது. அது அவர்களின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும் என்பதால், இந்தப் போக்கிற்கு முடிவு கட்ட தமிழக அரசின் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழ் மொழிப்பாடத்தாள் தேர்வை எழுதாத மாணவர்களின் பட்டியலை வட்ட அளவில் தயாரித்து, அந்த மாணவர்களுக்கு உளவியல் கலந்தாய்வு வழங்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் அடுத்து வரும் தேர்வுகளை தவறாமல்  எழுதுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

click me!