ஜெயலலிதா படம் இல்லாத அரசு விளம்பரம் - உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணமா?

 
Published : Feb 24, 2017, 09:43 AM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
ஜெயலலிதா படம் இல்லாத அரசு விளம்பரம் - உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணமா?

சுருக்கம்

வர்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பசுமையாக்கும் திட்டம் என்ற பெயரில் அரசு சார்பில் இன்று ,மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 69 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.

இதற்கான அனைத்து தமிழக நாளிதழ்களிலும் ஜெயலலிதாவின் படம் மிகவும் மங்கலாக வெளியிடப்பட்டள்ளது.

சென்னையில் நடைபெறவுள்ள இந்த விழா தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில் மரம் வளர்ப்போம்,,வளம் பெறவோம் என்றும்,ஜெயலலிதாவின் 69 ஆவது விறந்த நாளையொட்டி  69 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் மற்றும் வர்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பசுமையாக்கும் திட்டம் ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எப்போதுமே அரசு விளம்பரங்களில் ஜெயலலிதாவின் படம் மிகப் பெரிய அளவில் அச்சிடப்பட்டிருக்கும். ஆனால் தற்போது உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளதால், இனி அரசு விளம்பரங்களில் அவரது படம் இடம்பெறகூடாது என்ற விதிமுறை பின்பற்றப்பட்டுள்ளதா? என பொதுமக்களின் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதேநேரத்தில் ஜெயலலிதாவின் படத்தை போடவும் முடியாது…போடாமல் இருக்கவும் முடியாது என்ற நிலையில் இப்படி விளம்பரம் வந்திருப்பதாகவே தெரிகிறது.

PREV
click me!

Recommended Stories

கரூரில் விஜய் கட்சியில் கூட்டமாக சேர்ந்த இஸ்லாமியர்கள்..! செந்தில் பாலாஜிக்கு டப் கொடுக்கும் மதியழகன்
நீதிபதி சாமிநாதனுக்கு எதிராக கையெழுத்து போட்ட எம்.பி.க்களை உடனே தூக்க வேண்டும்..! அண்ணாமலை ஆவேச பேச்சு