தூத்துக்குடி வன்முறை…. மோசமாகி வரும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை…. புரோகித்-இபிஎஸ்-ஓபிஎஸ் அவசர சந்திப்பு !!

First Published May 23, 2018, 11:44 PM IST
Highlights
Goverrner ops and eps meet in raj bhavan chennai


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் ஆகியோர் கிண்டி ராஜ் பவனில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, ‘ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு’ சார்பில் நடைபெற்ற கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் கலவரமாக வெடித்தது.

கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர போலீஸ்  நடத்திய துப்பாக்கி சூட்டில் 10-ம் வகுப்பு மாணவி உள்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.  இதையடுத்து தூத்துக்குடியில் இன்று 2–வது நாளாக கலவரம் நீடித்தது.

அண்ணாநகர் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசியவர்களை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில்  மேலும் ஒருவர் உயிரிழந்தார். ஏற்கனவே படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் இன்று உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. 

இந்த நிலையில்   தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உடன், முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

அவருடம் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்,  தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி டி.கே.ராஜேந்திரன்  ஆகியோரும் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். அப்போது கலவரம், வன்முறை, துப்பாக்கி சூடு, இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போன்றவை குறித்து ஆளுநரிடம்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தார்.

click me!