திறன்மேம்பாடு, அறிவுவளர்ச்சி, தொழில்முனைவு உயர வேண்டும் – நாட்டு மக்களுக்கு ஆளுநர் வாழ்த்து

Asianet News Tamil  
Published : Oct 10, 2016, 03:08 AM ISTUpdated : Sep 19, 2018, 02:06 AM IST
திறன்மேம்பாடு, அறிவுவளர்ச்சி, தொழில்முனைவு உயர வேண்டும் – நாட்டு மக்களுக்கு ஆளுநர் வாழ்த்து

சுருக்கம்

விஜயதசமி மற்றும் ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

செயலாற்றல் மற்றும் பணியிடங்களை பூஜிக்கும் ஆயுத பூஜை விழாவும், தீமைக்கு எதிராக நன்மை வெற்றிபெறும் என்ற கோட்பாட்டின்படி, குழந்தைகள் மத்தியில் ஞானம் என்னும் ஒளியை தரக்கூடிய கல்வியை பயிற்றுவிக்க ஊக்கமளிக்கும் திருவிழாவாக விஜயதசமி விழாவும் கொண்டாடப்படுகின்றன.

இந்த மங்களகரமான இருவிழாக்களும் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் உள்ளிட்ட இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளில் வாழும் மக்களிடையே திறன்மேம்பாடு, அறிவுவளர்ச்சி மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றை வளர்த்து இந்தியாவை உலகின் தலைமை பீடத்தில் அமர்த்த வேண்டும் என வாழ்த்துவதாக தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

AIADMK Rift: மன்னிப்பு கடிதம் வழங்கிய எஸ்.பி.வேலுமணி தரப்பு.. சிவி சண்முகம் மிஸ்சிங்
TN Govt Scheme: தங்கைகளுக்கு கிடைக்கப்போகும் 8 கிராம் தங்கமும், பட்டுப்புடவையும்.! ஜூன் மாதம் முதல் அண்ணன் சீர் திட்டம் நடைமுறை?!