
தூத்துகுடியில் ஆளுநர் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் 100 நாட்களாக அமைதியான முறையில் போராடி வந்தனர். 100வது நாளில் போடப்பட்ட 144 தடை உத்தரவை மீறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை கட்டுப்படுத்த அரசு அவ்ர்கள் மீது துப்பாக்கி சூட்டினை நடத்தியது இதில் 13 பேர் உயிரிழந்தனர் 19பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இந்நிலையில் இன்று தூத்துகுடியில் இயல்பு நிலை திரும்பியதை ஒட்டி துணை முதல்வர் பன்னீர் செல்வமும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் காயமுற்றவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினர்.
இந்நிலையில் இன்று தூத்துக்குடி சென்ற ஆளுநர் அங்கு நடந்த துப்பாக்கிசூட்டில் இறந்த செல்வசேகர் படத்துக்கு ஆளுநர் அஞ்சலி. தூத்துக்குடியில் உள்ள பேய்க்குளம் என்னும் கிராமத்தில் வசித்து வந்த செல்வசேகர் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் இன்று துப்பாக்கி சூடு நடந்த தூத்துக்குடியை பார்வையிடச் சென்ற ஆளுநர் பன்வாரிலால் செல்வசேகர் படத்துக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். உடன் ஆட்சியர் சந்திப் நந்தூரி மற்றும் எஸ்.பி முரளி ரம்பா உடன் இருந்தனர். மேலும் காயம்பட்டவர்களை அரசு மருத்துவமனையில் சந்தித்து ஆறுதலும் கூறினார். பின் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.