உச்சக்கட்ட மோதல்.. மீண்டும் இன்று டெல்லிக்கு பறந்த ஆளுநர் ஆர்.என்.ரவி.. யாரை சந்திக்க போகிறார் தெரியுமா?

By vinoth kumar  |  First Published Jan 18, 2023, 8:10 AM IST

முதல்வர் மு.க.ஸ்டாலின் - ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. அதேபோல், மத ரீதியாக ஆளுநர் ரவி தொடர்ந்து பேசி வந்தார்.


பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி புறப்பட்டார்.  தமிழக சட்டப்பேரவை விவகாரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முதல்வர் மு.க.ஸ்டாலின் - ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. அதேபோல், மத ரீதியாக ஆளுநர் ரவி தொடர்ந்து பேசி வந்தார். இந்நிலையில், தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9-ம் தேதி ஆளுநர் உரையுடன் நடைபெற்றது. தனது உரையை வாசிக்க தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு, அமைதிப்பூங்கா, சமூகநீதி, சுயமரியாதை, பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், திராவிட மாடல் ஆட்சி ஆகிய வார்த்தைகளை தவிர்த்து விட்டு அடுத்த பக்கங்களுக்கு சென்றது சர்ச்சையானது. 

Latest Videos

இதையும் படிங்க;- சிறப்பு.. முதல்வர் ஸ்டாலினை ஆதரிக்க முடியாதுனு தைரியமாக சொல்கிறாரே! கனிமொழியை பாராட்டிய நாராயணன் திருப்பதி..!

இதனையடுத்து ஆளுநர் பேச்சுக்கு  எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு தயாரித்த உரை மட்டுமே அவைக் குறிப்பில் இடம் பெறும் என அறிவித்தார். இதையடுத்து, ஆளுநர் உடனடியாக வெளிநடப்பு செய்தார். ஆளுநரின் இந்த செயலுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தும், பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளராக ஆளுநர் செயல்படுகிறார். ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என கண்டன குரல்களை எழுப்பினர். 

இதையும் படிங்க;- ஆளுநரை மிரட்டிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.. திமுகவில் இருந்து நீக்கம்!! துரைமுருகன் அதிரடி!

இந்த நிகழ்வு சம்பந்தமாக தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, திமுக எம்.பி.க்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் குடியரசுத் தலைவரை சந்தித்தனர். அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை கொடுத்த அவர்கள், சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகள் குறித்து எடுத்துரைத்தனர். இதையடுத்து, கடந்த 13-ம் தேதி டெல்லி சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, 14-ம் தேதி இரவு சென்னை திரும்பினார். ஆளுநர் சொந்த வேலையாக டெல்லி சென்றதாகவும் யாரையும் சந்ததிக்கவில்லை என்ற தகவல் வெளியானது. 

இதையும் படிங்க;-  அயோக்கியன் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.. ஆர்.எஸ்.பாரதியையும் சும்மா விடக்கூடாது.. ஸ்டாலினுக்கு பாஜக எச்சரிக்கை.!

இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். கடந்த 9ம் தேதி சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றி மத்திய உள்துறை அமித்ஷாவுடன் விவாதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

click me!