ஆளுநர் தேவையில்லாமல் அரசியல் பேசுகிறார்.. ஓபிஎஸ் சொல்லியதுதான் எங்கள் கருத்தும்.. டிடிவி.தினகரன்..!

By vinoth kumarFirst Published Jan 18, 2023, 6:44 AM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் கட்சியை வலுப்படுத்தவும் தமிழ்நாடு முழுவதும் பூத் கமிட்டி அமைக்கவும் நாடாளுமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகள் சென்று அமைப்பை பலப்படுத்தும் வேலையை தற்போது செய்து வருகிறோம். அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஓர் அணியில் திரள வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

மக்கள் ஆதரவை பெற்று ஜனநாயக ரீதியாக தேர்தலில் வெற்றி பெற்று அம்மாவின் உண்மையான தொண்டர்கள் உள்ள இயக்கம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான் என்பதை நிரூபிப்போம் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

விழுப்புரத்தில் அமமுக பொதுச்செயலாளர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பதவி சண்டையால் அதிமுக யாருக்கு என்பது வழக்காக நீதிமன்றத்தில் உள்ளது. புரட்சித்தலைவரால் தீய சக்தி என்ற அடையாளம் காட்டப்பட்டுள்ள திமுகவை எம்ஜிஆர் மற்றும் அம்மாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து வரும் தேர்தல்களில் ஓர் அணியில் திரண்டு வென்று வென்று காட்டுவோம் என்பதை சொல்லிக்கொள்கிறேன். 

இதையும் படிங்க;- திமுக ஆட்சியில் எந்த அளவிற்கு கொள்ளையர்களுக்கு துணிச்சல் வந்திருக்கிறது பார்த்தீங்களா? கொதிக்கும் டிடிவி.!

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் கட்சியை வலுப்படுத்தவும் தமிழ்நாடு முழுவதும் பூத் கமிட்டி அமைக்கவும் நாடாளுமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகள் சென்று அமைப்பை பலப்படுத்தும் வேலையை தற்போது செய்து வருகிறோம். அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஓர் அணியில் திரள வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அதுதான் எங்களுடைய கருத்து. மக்கள் ஆதரவை பெற்று ஜனநாயக ரீதியாக தேர்தலில் வெற்றி பெற்று அம்மாவின் உண்மையான தொண்டர்கள் உள்ள இயக்கம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான் என்பதை நிரூபிப்போம்.

இதையும் படிங்க;-  வக்கிர புத்தி.. எந்த காலத்திலும் திமுக காரனுங்க திருந்தவே மாட்டானுங்க.. பெண் போலீசுக்கே பாலியல் தொல்லை! டிடிவி

தமிழ்நாட்டை தமிழகம் என்று சொல்ல வேண்டும் என ஆளுநர் தேவையில்லாமல்  அரசியல் பேசுகிறார். ஆளுநர் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார். இது வேலியே பயிரை மேய்வது போல இருக்கிறது. எனவே மத்திய அரசு அவரை திரும்ப பெற வேண்டும் என்பதே அமமுகவின் கோரிக்கை. தேர்தல் கூட்டணியை பற்றி வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் முடிவு செய்வோம் என டிடிவி.தினகரன் கூறினார். 

click me!