பார்த்தீங்களா.. அப்பவே ஆளுநர் பத்தி சொன்ன.. இப்ப உண்மை முகத்தை காட்டிட்டாரு.. திமிரும் திருமா..!

By vinoth kumarFirst Published Jun 13, 2022, 10:45 AM IST
Highlights

ஆளுநர் ஒரு நூறு விழுக்காடு ஆர்எஸ்எஸ் தயாரிப்பு. ஆர்எஸ்எஸ்-ஆல் உருவாக்கப்பட்ட ஒரு ஆளுமை. அவர் இங்கு ஆளுநராக நியமிக்கப்பட்டபோதே, அதனை எதிர்த்து, அவர் ஆளுநராக இங்கு வரக்கூடாது என முதன்முதலில் குரல் எழுப்பியது விடுதலை சிறுத்தைகள் கட்சி. இன்றைக்கு அவர் உண்மை முகத்தை காட்டத் தொடங்கியிருக்கிறார்.

ஆர்எஸ்எஸ்-ஆல் உருவாக்கப்பட்ட ஒரு ஆளுமை. அவர் இங்கு ஆளுநராக நியமிக்கப்பட்டபோதே, அதனை எதிர்த்து, அவர் ஆளுநராக இங்கு வரக்கூடாது என முதன்முதலில் குரல் எழுப்பியது விடுதலை சிறுத்தைகள் கட்சி என திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன்;- ஆளுநர் ஒரு நூறு விழுக்காடு ஆர்எஸ்எஸ் தயாரிப்பு. ஆர்எஸ்எஸ்-ஆல் உருவாக்கப்பட்ட ஒரு ஆளுமை. அவர் இங்கு ஆளுநராக நியமிக்கப்பட்டபோதே, அதனை எதிர்த்து, அவர் ஆளுநராக இங்கு வரக்கூடாது என முதன்முதலில் குரல் எழுப்பியது விடுதலை சிறுத்தைகள் கட்சி. இன்றைக்கு அவர் உண்மை முகத்தை காட்டத் தொடங்கியிருக்கிறார்.

அவர் சனாதன தர்மமே இந்தியாவை உருவாக்கியிருக்கிறது, இந்த தேசத்திற்கான ஆன்மாவான அரசமைப்பு சட்டத்தை வழங்கியிருக்கிறது என்றெல்லாம் அவர் உளற ஆரம்பித்திருக்கிறார். இது தேசத்திற்கு நல்லதல்ல. அவர் வகிக்கும் பொறுப்புக்கும் அழகல்ல என்றார். 

மேலும், நுபுர் சர்மாவையும் நவீன் ஜின்டாலையும் சிறைப்படுத்தினால் போராட்டங்கள் நடக்காது. அவர்களின் கருத்துகள் வெறும் விமர்சனங்கள் அல்ல. அவை இசுலாமிய கிறித்தவ மதங்களைச் சார்ந்தவர்கள் மீதான வெறுப்பு அரசியல். இந்தவெறுப்பு அரசியலுக்கு எதிராகத்தான் நாடெங்கும் மக்கள் போராடுகின்றனர் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

click me!