வாஜூபாய் வாலா ஆளுநரா? ஏஜெண்டா? எனக்கு சந்தேகமா இருக்கு... வெச்சு செய்யும் வைகோ...!

First Published May 18, 2018, 5:28 PM IST
Highlights
Governor? or Agent? Vaiko about Wajuibai Wala


கர்நாடக ஆளுநர் வாஜூபாய் வாலா, பாஜகவின் ஏஜெண்டமாக செயல்பட்டு வருவதாகவும் அவரால் நாட்டின் அரசியலமைப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகவும் மதிமுக பொது செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடகாவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 104 தொகுதிகளில் வென்று இருந்தாலும் அந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 78
இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமைக்கோரி இருந்தபோதும், பாஜகவிற்கே ஆளுநர் அழைப்பு விடுத்த நிலையில், கர்நாடகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலிலும் பல்வேறு களேபரங்களுக்கும் மத்தியில் முதலமைச்சராக பதவியேற்றார்.
 
உச்சநீதிமன்றம் பதவி ஏற்புக்கு தடை விதிக்க மறுத்ததால் எடியூரப்பா முதலமைச்சராக பதவி ஏற்றார். ஆட்சி அமைக்க காங்கிரஸ் - மஜத கூட்டணிக்கு போதுமான எம்.எல்.ஏ.க்கள் இருந்தும், எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கர்நாடக ஆளுநர் அழைப்பு விடுத்தார். அதன்படி எடியூரப்பா முதலமைச்சராகவும் பதவியேற்றார். ஆளுநரின் இந்த முடிவுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து தங்கள் கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் மதிமுக பொது செயலாளர் வைகோ, கர்நாடக ஆளுநர் வாஜூபாய் வாலா, பாஜக அரசின் ஏஜெண்டமாக செயல்பட்டு வருகிறார் என்றும் அவரால் நாட்டின் அரசியலமைப்பு கேள்விக்குறியாகி உள்ளது என்றும் கூறியுள்ளார்.

மதிமுகவின் வெள்ளி விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கட்சிக்கொடி ஏற்றும் விழா இன்று நடந்தது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகாவில், ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாத நிலையில், ஆளுநர் பாஜகவை ஆட்சியில் அமர்த்தி உள்ளார். இது திட்டமிட்ட ஜனநாயகப் படுகொலை என்றார்.

கர்நாடக ஆளுநர் வாஜூபாய் வாலா, பாஜகவின் ஏஜெண்டாக செயல்பட்டு வருகிறார். அவரால் அம்மாநிலத்தில் குதிரைபேர ஆட்சிக்கு வழி வகுத்துள்ளது. இது நாட்டின் அரசியலைமைப்புச் சட்டத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. 

மத்திய அரசும் தமிழகத்துக்கு எதிராகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இறுதி வரை காவிரி பிரச்சனையில் மேலாண்மை வாரியம் அமைக்காமல்
நினைத்ததை சாதித்து விட்டார்கள் என்று வைகோ குற்றம் சாட்டினார்.

click me!