கிரண்பேடி ஹிட்லரின் தங்கச்சி... வாய்க்கு வந்தபடி வசைப்பாடும் முதல்வர் நாராயணசாமி...!

By vinoth kumarFirst Published Nov 19, 2019, 4:39 PM IST
Highlights

அமைச்சரவை முடிவுகளில் ஆளுநர் தலையிட கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பித்தும் ஆளுநர் மாளிகையில் அமர்ந்து தர்பார் நடத்தி வருகிறார்.  இதற்கெல்லாம் இந்த மாதம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என ஆவேசமாக பேசினார். மேலும், ஆளுநர் கிரண்பேடி ஹிட்லரின் தங்கச்சி போல் செயல்படுகிறார் என்று விமர்சனம் செய்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை சர்வாதிகாரி ஹிட்லரின் தங்கை என முதல்வர் நாராயணசாமி விமர்சனம் செய்துள்ளார். 

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்றதில் இருந்தே முதல்வர் நாராயணசாமிக்கும் கிரண் பேடிக்கும் இடையே அதிகார மோதல் போக்கு நிலவி வருகிறது. அரசு நிர்வாகத்திற்கு முட்டுக்கட்டை போடுவதாகவும், மத்திய அரசின் கைப்பாவையாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி செயல்படுவதாக நாராயணசாமி தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். 

இந்நிலையில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 102-வது பிறந்தநாள் புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், முதல்வர் நாராயணசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் இந்திரா காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எந்தவித அதிகாரங்களும் இல்லாமல் அதிகாரிகளை மிரட்டுவது போன்ற செயல்களில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டினார். 

click me!