7 ஆயிரம் கோடி நிதிப்பற்றாக்குறை.. அதிரடியாக உயர்த்தப்படுகிறதாக மின் கட்டணம்..? அமைச்சரின் பதில்!!

By Asianet TamilFirst Published Sep 11, 2019, 5:25 PM IST
Highlights

தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்த்தப்படுமா என்கிற கேள்விக்கு மின்துறை அமைச்சர் தங்கமணி பதிலளித்துள்ளார்.

கஜா புயலில் ஏற்பட்ட செலவுகளை ஈடுகட்ட  தமிழகத்தில் மின்சார கட்டணங்கள் உயர்த்தப்பட இருப்பதாக அண்மையில் செய்திகள் வந்தன. நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக பதிவுக்கட்டணம், மின் இணைப்பு கட்டணம், மீட்டர் காப்பீடு, வளர்ச்சி கட்டணம், ஆரம்ப மின்பயன்பாடு உள்ளிட்ட பல கட்டணங்கள் அடங்கிய மின் இணைப்புக்கான தொகையை உயர்த்த மின் வாரியம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பால் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து மின் கட்டணமும் உயர்கிறதா என கவலை அடைந்தனர்.

இதையடுத்து இன்று மின்துறை அமைச்சர் இது குறித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி இருந்தாலும் மின் கட்டணங்கள் உயர்த்தப்படாது என்றார். மின் வாரியத்தின் நிதிப்பற்றாக்குறை குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்பட இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் புதிய மின் இணைப்பிற்கு மட்டும் கட்டணங்கள் உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்ததாகவும் அதுகுறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார். 

பொதுமக்கள் மீது நிதிச்சுமையை செலுத்த மாட்டோம் என்று தெரிவித்த அவர் இந்த ஆண்டு மட்டும் மின்வாரியம் 7 ஆயிரம் கோடி நிதிப்பற்றாக்குறையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

click me!