மதம் மாறியவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கக் கூடாது - அர்ஜூன் சம்பத் பேச்சு

By Velmurugan sFirst Published Jul 4, 2023, 8:56 AM IST
Highlights

மதம் மாறியவர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கக்கூடாது என்று திசையன்விளையில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இந்து மக்கள் கட்சியின் அலுவலக திறப்பு விழா திசையன்விளை தெற்கு பஜார் பகுதியில் நடைபெற்றது. தமிழ்நாடு இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் இந்நிகழ்வில் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து திசையன்விளை உடன்குடி சாலையில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், இந்தியாவில் அதிகமான சொத்துக்கள் இருப்பது கிறிஸ்துவ டயோ சீசன் நிறுவனத்தில்தான். 

ஒவ்வொரு டையோ சீசனுக்கும் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. பிரிட்டிஷ்காரன் செல்லும்போது கொடுத்து சென்று விட்டான். அவர்களுக்கு சாதி சான்றிதழ் கொடுக்கும் நடைமுறை இங்கு உள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு சிஎஸ்ஐ நாடார் என்றும், ஆசி நாடார் என்றும் சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. இது எந்த வகையில் கொடுக்கிறார்கள்? இதற்கு நாம் எப்படி தடை உத்தரவு வாங்க வேண்டும் என்பது குறித்து சிந்திக்க வேண்டும். 

வாட்ஸ்அப்பில் பாலியல் தொழில்.. 3 சிறுமிகளை சீரழித்த 11 பேர் - சென்னையை நடுங்க வைத்த கொடூர சம்பவம்

ஒருவன் மதம் மாறி சென்று விட்டால் சாதியை இழக்கிறான் என நீதிமன்ற உத்தரவு நம்மிடம் இருப்பதாக கூறுகிறோம். ஆனால் நடைமுறையில் அது இல்லையே. பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி கிறிஸ்தவர்கள் ஆக்டோபஸ் கரங்கள் போல் அனைத்து இடங்களிலும் வேலை செய்துள்ளார்கள். சட்டப் போராட்டம் நடத்திதான் ஆக வேண்டும். இவர்கள் செய்வது அரசியல் சாசனத்திற்கு முரணானது. சிஎஸ்ஐ நாடார் என்று சாதி சான்றிதழ் வழங்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும். ஆசி நாடார் என சாதி சான்றிதழ் வழங்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும். இதற்கு நாம் பெரிய முயற்சி எடுக்க வேண்டும். 

குழந்தை விவகாரம்: இதனால்தான் செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாரா? விஜயகாந்த் கேள்வி !!

தென் மாவட்டங்களில் இதை சரிப்படுத்த வேண்டிய சூழ்நிலையில் நாம் உள்ளோம். இல்லையெனில் வருங்கால தலைமுறையினருக்கு நிச்சயம் பாதிப்பு உண்டாகும். இன்னொரு மணிப்பூர் தான் உருவாகும். அதனால் இந்த நேரத்தில் நாம் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

click me!