Coronavirus | கொரானா மரணங்களுக்கு நிவாரணத் தொகையை அறிவித்தது தமிழக அரசு.. எவ்வளவு தொகை தெரியுமா.!

By Asianet TamilFirst Published Dec 7, 2021, 8:24 AM IST
Highlights

முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டு நிவாரண உதவி பெற்றவர்கள், கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்து அரசின் நிவாரண உதவி பெற்றவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50,000 நிவாரணத் தொகையை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டு அலைகள் ஏற்பட்டு வைரஸ் தீயாகப் பரவியது. கொரானாவில் பாதிக்கப்பட்டு ஏராளமானவர்கள் பலியாகினர். தமிழகத்தில் இதுவரை 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் உயிரிழந்திருக்கிறார்கள். கொரோனா பெருந்தொற்று பேரிடர் கால சட்டங்களின்படி கையாளப்படுகிறது. பேரிடர் கால சட்டத்தின், பேரிடரில் சிக்கி உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் வழங்க வேண்டும் என்பது விதி. இதனபடி கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.4 லட்சம் வழங்க இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில், ரூ.50 ஆயிரம் வழங்க மத்திய அரசு பிரமாணம் தாக்கல் செய்தது. 

அதன்படி கொரோனா மரணங்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் பல மாநிலங்கள் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கி வருகின்றன. தமிழகத்தில் அந்த நிவாரணம வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 50,000 நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிவாரண நிதியை மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் தமிழக அரசு அந்த  உத்தரவில் பிறப்பித்துள்ள அரசாணையில் தெரிவித்துள்ளது. 

முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டு நிவாரண உதவி பெற்றவர்கள், கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்து அரசின் நிவாரண உதவி பெற்றவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

click me!