நாடு முழுவதும் 12 கவர்னர்களை மாற்றுகிறது மத்திய அரசு !! பாஜக மூத்த தலைவர்களுக்கு அடிச்சது லக்கி பிரைஸ் !!

By Selvanayagam PFirst Published Jun 25, 2019, 8:29 AM IST
Highlights

மேற்கு வங்கம், உ.பி. உட்பட 12 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமிக்க மத்திய அரசு நடவடிக்கை தொடங்கியுள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் பல மூத்த பாஜக தலைவர்கள் இடம் பெறுவார்கள் என தகவ்லகள் வெளியாகியுள்ளன.
 

மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், திரிபுரா, நாகாலாந்து, குஜராத் ஆகிய மாநில கவர்னர்களின் பதவிக் காலம் அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது. மேலும் மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா மாநிலங்களின் ஆளுநர்களின் பதவிக் காலம் வரும் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைகிறது.

இதுதவிர, சத்தீஸ்கர் மாநிலத்தின் ஆளுநராக மத்திய பிரதேச மாநில ஆளுநர் கூடுதல் பொறுப்பு வகிக்கும் நிலையில், அம்மாநிலத்திற்கு தனி ஆளுநரை நியமிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மிசோரம் மாநிலத்தில் ஆளுநராக இருந்த கும்மணம் ராஜசேகரன் பதவியை ராஜினாமா செய்ததால், அங்கும் ஆளுநரை நியமிக்க வேண்டியுள்ளது. கேரள மாநில ஆளுநர் சதாசிவத்தின் பதவிக்காலம் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. 

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் ஆளுநராக உள்ள நரசிம்மன், ஏதாவது ஒரு மாநிலத்தில் தன் பதவியைத் தொடரவும், மற்றொருவர் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. 

இது போன்று 12 மாநிலங்களில் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட வேண்டியுள்ளது. இதற்கான பணிகளை தற்போது பிரதமர் அலுவலகம் தொடங்கியுள்ளது. ஒரு சில மாநிலங்களில் உள்ள கர்கள் பதவி நீட்டிப்பு செய்யப்படலாம் என்கிறது பிரதமர் அலுவலக வட்டாரம். இது தவிர பல பாஜக மூத்த தலைவர்கள் கவர்னர்களாக நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது. 

click me!