6 மாவட்டங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. மின்கட்டணம் செலுத்த மேலும் 15 நாள் அவகாசம்.!!

By T BalamurukanFirst Published Jul 16, 2020, 8:08 AM IST
Highlights

சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.
 

சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மின் கட்டணம் குறித்த வழக்கு தொடரப்பட்டது. மின் கட்டணம் கணக்கீடு செய்ததில் எந்த முறைகேடுகளும் இல்லை அனைத்துமே சரியாக இருக்கிறது என்று அரசு தரப்பில் வாதங்கள் முன்வைத்ததைத் தொடர்ந்து அந்த வழக்கு நேற்று தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.

 இந்த நிலையில்,சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மதுரை, தேனி ஆகிய 6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் மேலும் 15 நாட்கள் நீட்டித்து அதாவதும் ஜூலை 30 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் 4 மாத காலத்திற்கான மின்நுகர்வு, 2 மாதங்களுக்கான வீதப்பட்டி அடிப்படையில், சமமாக பிரிக்கப்பட்டுள்ளது என்றும், அந்த மின்நுகர்வு 2 மாதங்களுக்கான வீதப்பட்டிப்படி, மின்கணக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.இதனால் மின்கணக்கீடு செய்யும் போது, தனித்தனியே ஒவ்வொரு 2 மாதங்களுக்கான நுகர்விலும் தலா 100 யூனிட்டுகள் இலவச மின்சாரம் அளிக்கப்பட்டு, தொகை கணக்கிடப்பட்டுள்ளது என்றும், அவ்வாறு கணக்கீடு செய்யப்பட்ட தொகையில், ஏற்கனவே மார்ச் மற்றும் ஏப்ரல் 2020 மாதங்களில் முந்தைய மாத மின்கணக்கீட்டின்படி செலுத்தப்பட்ட தொகையானது கழிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!