Jai Bhim: உலகளவில் கெத்து காட்டும் ஜெய் பீம்.. பாமகவை வெறுப்பேற்றும் திருமாவளவன்..!

By vinoth kumarFirst Published Dec 2, 2021, 10:26 AM IST
Highlights

 இது - விளிம்புநிலை மக்களின் விடுதலைக் குரலுக்காக அனைத்துலக சமூகம் அளிக்கின்ற அங்கீகாரம். ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்காக உரத்துப் பேசுவோரை ஊக்கப்படுத்துகின்ற உயரிய சான்றாவணம் என்று தெரிவித்துள்ளார். 

சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றாலும், அதே அளவில் பெரும் சர்ச்சைகளுக்கு இடையே கோல்டன் குளோப் விருது பெறும் ஜெய்பீம் படக் குழுவினருக்கு வாழ்த்துகள் என பாமக வெறுப்பேற்றும் வகையில் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு எடுக்கும் படங்கள் பெரும்பாலும் சர்ச்சையில் சிக்குவது என்பது வழக்கமாக இருந்து கொண்டு வருகிறது. அந்த வகையில், ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து அவரது 2 டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் தீபாவளியை முன்னிட்டு, ஓடிடி தளத்தில் வெளியான 'ஜெய்பீம்' படத்துக்கு தொடர்ந்து நல்ல விமர்சனங்கள் கிடைத்தாலும், அதில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் சர்ச்சைக்கு வித்திட்டது. 

இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் உதவி ஆய்வாளருக்கு குருமூர்த்தி என பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் அவரது இல்லத்தில் வன்னியர்களின்  அடையாளங்களில் ஒன்றான அக்னி கலசம் காலண்டர் மாட்டப்பட்டதே இந்த சர்ச்சைகளுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதனையடுத்து, கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து சர்ச்சை காட்சிகள் நீக்கப்பட்டது. அப்படி இருந்த போதிலும் இந்த பிரச்சனை இன்னும் ஓயவில்லை. பாமகவினரும், வன்னியர் சங்கத்தினரும் ஜெய்பீம் படக்குழுவினருக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்தனர். வன்னியர் சங்கம் சார்பில் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேலும், சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்த முயல்வதால் 'ஜெய் பீம்' திரைப்படத்துக்கு விருது வழங்கக்கூடாது என வன்னியர்கள் சங்கம் சார்பாக கடிதம் எழுதப்பட்டது.  இந்நிலையில், ஜெய்பீம் திரைப்படத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதாவது, ஆஸ்கார் விருதுக்கு அடுத்து சினிமா துறையில் புகழ்பெற்ற விருதாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுப் பட்டியலுக்கு ஜெய்பீம் படம் தேர்வாகியுள்ளது. குளோப் விருதுக்கு ஜெய் பீம் திரைப்படம் தேர்வாகி உள்ளதற்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இந்நிலையில், ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்காக உரத்துப் பேசுவோரை ஊக்கப்படுத்துகின்ற உயரிய சான்றாவணம் என திருமாவளவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- கோல்டன் குளோப் விருது பெறும் ஜெய்பீம் படக் குழுவினருக்கு வாழ்த்துகள். இது - விளிம்புநிலை மக்களின் விடுதலைக் குரலுக்காக அனைத்துலக சமூகம் அளிக்கின்ற அங்கீகாரம். ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்காக உரத்துப் பேசுவோரை ஊக்கப்படுத்துகின்ற உயரிய சான்றாவணம் என்று தெரிவித்துள்ளார்.

பெறும் ஜெய்பீம் படக் குழுவினருக்கு வாழ்த்துகள்.

இது -
விளிம்புநிலை மக்களின் விடுதலைக் குரலுக்காக
அனைத்துலக சமூகம்
அளிக்கின்ற அங்கீகாரம்.

ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்காக
உரத்துப் பேசுவோரை
ஊக்கப்படுத்துகின்ற
உயரிய சான்றாவணம். pic.twitter.com/mMayZDQ6oS

— Thol. Thirumavalavan (@thirumaofficial)

ஏற்கனவே ஜெய் பீம் திரைப்படத்திற்கு  கோல்டன் குளோப் விருது அளிக்கப்பட்டதற்கு கடும் கோபத்தில் உள்ள பாமகவுக்கு திருமாவளவன் வாழ்த்து கூறியிருப்பது மேலும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.சூர்யா நடித்த ஜெய் பீம் திரைப்படம் வெளியான போது பாமக தொடர்ந்து எதிர்ப்பு குரல் தெரிவித்த போது சூர்யாவுக்கு உறுதுணையாகவும், ஆதரவாகவும் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி குரல் கொடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

click me!