கிடுகிடுவென உயரப்போகும் தங்கத்தின் விலை... மத்திய பட்ஜெட்டால் அதிர்ச்சி..!

By Thiraviaraj RMFirst Published Jul 5, 2019, 2:20 PM IST
Highlights

மத்திய பட்ஜெட் அறிவிப்பால் தங்கம் மற்றும் பெட்ரோல் விலை அதிகரிக்கும் எனத் தெரிய வந்துள்ளது.

மத்திய பட்ஜெட் அறிவிப்பால் தங்கம் விலை கிராமுக்கு 70 ரூபாயும், சவரனுக்கு 560 ரூபாயும் அதிகரிக்கும் எனத் தெரிய வந்துள்ளது.

தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று புதிய அரசு அமைக்கப்பட்டதை அடுத்து, 2019 - 2020 ஆம் ஆண்டுக்கான முழு அளவிலான பட்ஜெட் இன்று நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், இணையதளம் மூலம் முக அடையாளம் இல்லாமல் வரித்தாக்கல் செய்யலாம். வங்கி கணக்கில் இருந்து 1 கோடிக்கு மேல் பணமாக எடுத்தால் 2% டிடிஎஸ் பிடிக்கப்படும். குறைந்த அளவிலான ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளுக்கு எந்த கட்டணமும் கிடையாது. ரூ400 கோடி வரை ஆண்டு வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வருமான வரி 25 சதவீதமாக குறைக்கப்படும். 

மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து, 5 சதவீதமாக குறைக்கப்படும். மின்சார வாகனங்கள் வாங்கினால் வருமான வரியில் சலுகை  சோலார், கம்ப்யூட்டர் உள்ளிட்ட  மின்னணு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மறைமுக வரிக்குள் கொண்டு வரப்படும். பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்களிப்பு 51 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

"ஸ்டார்ட் அப்" நிறுவனங்களுக்கான நிதித்தேவைகளுக்கு தனி நிதியம் அமைக்கப்படும். பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ 70 ஆயிரம் கோடி மூலதனம் செய்யப்படும். வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் இந்தியாவின் அடிப்படை நிதி ஆதாரமாக உள்ளன தங்கம் மீதான சுங்கவரி 2.5% உயர்த்தப்படும் எனக்கூறப்பட்டுள்ளது. தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 10% இருந்து 12.5%-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்கத்தின் விலை கடுமையாக உயர வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு லிட்டர் பெட்ரோல் மீதான செஸ்வரி 1% உயர்த்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளதால் பெட்ரோல் விலையும் உயரும்.

 

click me!