தாய் தந்தை முன் பட்ஜெட் தாக்கல் செய்த அதிர்ஷ்டசாலி நிர்மலா சீதாராமன்..! முதல் முழு நேர பெண் நிதி அமைச்சர் இவரே..!

By ezhil mozhiFirst Published Jul 5, 2019, 1:28 PM IST
Highlights

நடந்து  முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மை வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மை வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. இந்த நிலையில் பாராளுமன்ற மக்களவையில் நிதி மந்திரியான நிர்மலா சீதாராமன் மத்திய பொது பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். இதனை நேரடியாக காண்பதற்காக அவருடைய தாய் தந்தை மிகவும் உற்சாகமாக வந்துள்ளனர்

நிதி மந்திரியாக பதவி ஏற்றவுடன் 2019-2020 ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் தயாரிப்பில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார் நிர்மலா சீதாராமன். இன்று பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக பொருளாதார அறிக்கையை நேற்று மக்களவையில் தாக்கல் செய்து இருந்தார். இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு மீண்டும் கூடிய பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார்.

இதில் மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் என்பது பெருமையான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. இத்தகைய பெருமை வாய்ந்த நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்வதை காண்பதற்காக அவருடைய தந்தையான நாராயணன் சீதாராமன் தாய் சாவித்திரி ஆகியோர் பாராளுமன்றத்திற்குள் வந்தனர்.

இவருடைய தந்தை நாராயணன் சீதாராமன், இந்திய ரயில்வே துறையில் வேலை செய்தவர் என்பது  குறிப்பிடத்தக்கது. நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த அறிக்கைக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து உள்ளது. 

click me!